Sunday, January 26, 2014 0 comments

மேல்மாகாண சபைத்தேர்தலும் கம்பஹா மாவட்ட முஸ்லீம்களும்

மேல்மாகாண சபைத்தேர்தலும் கம்பஹா மாவட்ட முஸ்லீம்களும்

கலைக்கப்பட்ட மேல்மாகாண சபைக்கான தேர்தல் 2014 மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மேல்மாகாணத்தைப் பொறுத்தவரை கொழும்பு கம்பஹா களுத்துறை ஆகிய 3 மாவட்டங்கள் இதில் உள்ளடங்குகின்றன. நாம் இப்பகுதியில் கம்பஹா மாவட்டம் பற்றிய விடயத்துக்கு வருவோம்.

கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக (4.2 வீதத்தினர்) வாழ்கின்றனர். முஸ்லிம் வாக்காளர்களை பொறுத்தவரை ஏறத்தாள 65000 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். குறைந்த பட்சம் 2 பிரதிநிதிகளை மாகாண சபைக்குத் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தும் இதுவரை ஒருவரே இருந்து வருகிறார்.

கடந்த 2009 இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லீம் காங்கிரஸ் துஆ உள்ளிட்ட கட்சிகளில் முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் முஸ்லிம் காங்ரஸ் சார்பாக போட்டியிட்ட சாபி ரஹீம் 12 344 வாக்குகளைப்பெற்று மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். சுதந்திர கட்சி சார்பாக போட்டியிட்ட சகாவுல்லாஹ் 21 857 வாக்குகளைப் பெற்ற போதும் தெரிவாகவில்லை.

முகா இத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் 18 014 வாக்குகளைப்பெற்றுக் கொண்டது.  இதில் சாபி ரஹீம் 12 344 வாக்குகளைப்பெற்று மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். அவர் கடந்த 2004 இல் நடந்த மாகாண சபைத்தேர்தலில் போட்டியிட்டு 3001 வாக்குகளைப்பெற்று மாகாண சபைக்குத் தெரிவானார்.

இம்முறை பல்வேறு கட்சிகள் முஸ்லீம் வேட்பாளர்களை களமிறக்கவுள்ளன. இம்முறை பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க பெரும் முயற்சி எடுக்க வேண்டும். 5 இற்கும் அதிகமான கட்சிகளில் முஸ்லீம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தனைக்கும் தெரிவுசெய்யப்படப்போவது ஒரு முஸ்லிம் வேட்பாளர். அதுவும் கிடைக்காமல் போக செய்யும் சுய நல அரசியல்வாதிகளாக எம்மவர்கள் காணப்படுகின்றனர். அகில இலங்கை மக்கள் காங்ரஸ்  கட்சி தனித்துப்போட்டியிடுகிறது.பெறுமதிமிக்க வாக்குகள் சிதறடிக்கப்பட வாய்ப்புக்களே அதிகம். மக்கள் தமது வாக்குகளை அளிக்க கூடிய கவனம் எடுக்க வேண்டும். 

வெறும் பொய்ப்பிரச்சாரங்களை நம்பியும் கவர்ச்சிகளுக்கு அடிபணியாமலும் உங்கள் அமானிதமான வாக்குகளை உரிய பிரதிநிதிகளுக்கு வழங்கி எமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். புதிய கட்சிகள் வெறும் சோபனக்காட்சிகள் மாத்திரமே. அது எமது பிரதிநிதித்துவத்தை சிதறடிக்க பேரினவாத அரசினால் போடப்பட்ட திட்டமேயாகும்.


0 comments

அப்துல் காதிர் ஜீலானி - ஸலாஹ்தீன் அய்யூபி

அப்துல் காதிர் ஜீலானி - ஸலாஹ்தீன் அய்யூபி


“இவரை போன்று ஒர் ஆட்சியாளர் வர வேண்டுமே” என்று ஆதங்கப்படுபவர்கள் முஸ்லிம்களை விட கிறிஸ்தவர்கள். சுல்தான் ஸலாத்தீன் அய்யூபி அவர்கள் உலக வராலற்றில் ஒரு சிறந்த போர் வீரர் என்பதற்கு மேலதிகமாக பல்லின சமூகத்தால் போற்றப்பட்ட அதிமேதகு ஆட்சியாளர். முதல் கிப்லா பைதுல்மக்திஸில் உள்ள அல் அக்ஸா பள்ளிவாசலை கி.பி 1187ம் ஆண்டு முஸ்லிம் உம்மாவுக்கு மீட்டுத்தந்தார். குத்தஸை மீட்ட போது பணம் நட்ட ஈடு செலுத்த வசதியற்றவர்களுக்கு சொந்த பணத்தில் இருந்து வாரிக்கொடுத்தார். மரணப்படுக்கையிலிருந்து திறைசேரியை உற்று நோக்கினார். ஜெரூஸம் விடுவிக்கப்பட்டது.கிறிஸ்தவர்கள் அஞ்சிக்கொண்டிருந்தார்கள் ஸலாஹ_த்தீன் உயரை எடுத்துவிடுவார் என்று. அங்கிருந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை விட அதிகம். “நீங்கள் திருப்தியடையும் எந்த இடத்திற்கும் செல்லலாம் நீங்கள் சுதந்திரமளிக்கப்பட்டுவிட்டடீர்கள்” என்ற வசனம் வரலாற்றில் ஓர் ஏடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அஹ்லுஸ் சுன்னாவுக்கு முராணான அகீதா போதிக்கபடுவதை அறிந்த அவர் பல்கலைகழகத்தை தற்காலிகமாக மூடினார். சுல்தான் ஸலாத்தீன் அய்யூபி அவர்கள் “காதிரியா தரீக்காவைச் சேர்ந்தவர். சூபிஸத்தின் பயிற்சிகளே அவரை ஒரு சிறந்த ஆட்சியாளராக மாற்றியது. சுல்தான் ஸலாஹ_த்தீன் படையில் இருந்த தளபதிகளும், படைவீரர்களும் காதீரியா தரீக்காவைச் சேர்ந்தவர்கள் என்று பேராசிரியர் தாஹிருல் காதிரி அவர்களும் கூறுகிறார். செய்ஹ் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களின் ஒரு மாணவரை இன்றை உலகம் ஆட்சிக்காகத் தேடிக்கொண்டிருக்கிறது. சுல்தான் ஸலாஹ_த்தீன் அய்யூபி ஒரு காதிரி என்பதை நாம் எத்தனை பேர் தான் அறிந்து வைத்துள்ளோம்
0 comments

இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம்.

இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம்.

(Izz ad-Din al-Qassam, military wing of the Hamas)

பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை படிக்கும் சகலரும் அறிந்துவைத்திருக்க வேண்டியவர்கள் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் அவர்கள்.பிரான்ஸ், பிரித்தானியாவின் காலனித்துவத்திற்கு எதிராகவும் குறிப்பாக 1920ம் ஆண்டுக்குப் பின்னர் சியோனிஸத்திற்கு எதிராகவும் இளைஞர்களை ஒன்று திரட்டிப் போராடினார்கள். சிரியாவில் பிறந்த உயர்கல்விக்காக அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் சென்றார்கள். வஹாபிஸ சிந்தனையாளர்களான முஹம்மத் அப்துஹ், ராஷித் ரிழா போன்றவர்களிடமும் இமாம் கஸ்ஸாம் கற்றார்கள். வஹாபிகளிடம் கற்றாலும் காதிரியா தரீக்காவையே அவர்கள் பின்பற்றினார்கள். சமூக சீர்திருத்தத்தில் ஆர்வம் கொண்டிருந்தமையால் கூடுதலானோர் இவர்களின் கருத்துக்களால் கவரப்பட்டார்கள். இஸ்ஸதீன் கஸ்ஸாம் சமூக சீர்த்திருத்த பணிகளுக்கு அவர் பின்பற்றிய காதிரிய்யா தரீக்கா உந்துசக்தியாக அமைந்தது.
பெனிட்டோ மொஸோலினியின் இத்தாலியப் படை 1911ல் லிபியாவை ஆக்கிரமித்த போது அதற்கு எதிராக போராட அவர்கள் தயாரானார்கள். லிபியவைப் பாதுகாக்க நிதி
திரட்டினார்கள்.போராட்டத்திற்கான வெற்றிபாடலும் இமாம் அவர்களாலேயே இயற்றப்பட்டது. 1912ம் ஆண்டு வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் இத்தாலியரை எதிர்ததுப் போராடுமாறு
லிபியர்களுக்கு பகிரங்கமாக அழைப்புவிடுத்தார்கள். 1919ம் ஆண்டு பிரான்ஸியரின் ஆக்கரமிப்புக்கு எதிராக சிரியாவில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். பிரான்ஸின் ஆதரவுடன்
இயங்கிய அலவியர்களுக்கு எதிராக இமாம் கஸ்ஸாமின் ஜப்லிஹ் படைதாக்குதலை நடத்தியது. இதன்போது தான் பிரான்ஸியர்களுக்கு எதிராக இமாமின் படை கெரில்லா தாக்குதல் நடத்தியது.
1929ம் ஆண்டு பலஸ்தீன் ஷரீஆ நீதிமன்றத்தின் திருமணப்பதிவாளராக நியமிக்கப்பட்டார்கள். பலஸ்தீனில் விவிசாய அமைப்புக்களை கட்டியெழுப்புவதிலும் அயராது உழைத்தார். இஸ்ரேல் -பிரிடிஷ் எதிர்ப்பு இயக்கமானThe Black Hand group இமாம் அவர்கள் 1930ம் ஆண்டில் உருவாக்கி ஸியோனிஸர்களுக்கு எதிரான தாக்குதல்களை ேற்கொண்டார்ள். பலஸ்தீன் மக்களுக்கு சொந்தமான காணிகளில் நிறுவப்பட்டிருந்த சட்டவிரோதக்குடியிருப்புக்கள் மீது இந்த படைதாக்குதல் நடத்தியது. ஜெரூஸலத்தின் முப்தி ஹாஜ் முஹம்மத் அமீன் அவர்களுடன் நெருங்கிய உறவைப் பேணினார்கள். ஜேர்தானைச் சேர்ந்த காலனித்துவ எதிர்பாளரான மன்னர்ரஷீத் அல் குசையின் நெருக்கிய ஆதரவும் இமாம் அவர்களுக்கு இருந்தது. இமாம் கஸ்ஸாம் அவர்கள் 1935
நவம்பர் மாதம் 20ம் திகதி 52ம் திகதி பிரிடிஷ் பொலிஸாரின் தாக்குதலில்
ஷஹீதாக்கப்பட்டார்கள். இமாம் அவர்கள் ஷஹீதாக்கப்படதன் பின்னர் டேவிட் பென்கூரியன் என்ற யூதன் இப்படிச் சொன்னான். 'முதல் தடவையாக ஒருவர் தனது வாழ்வை அர்ப்பணித்ததை அரபிகள் கண்டுவிட்டார்கள்.அரேபியர்களிடம் குறைபாடாக இருந்த தர்மீக உறுதியை இது வழங்கும்" என்றான். யூத சியோனிஸத்திற்கு எதிரான போராட்டத்தில் இமாம் அவர்கள் ஓர் அழியாச்சின்னமாகும். இமாம் அவர்களை கௌரவிக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பின் இராணுவப்பிரிவுக்கு 'இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாம் படையணி" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஸ்ஸாம் ஏவுகணையும் பலஸ்தீன் போராளிகளால் பயன்படத்தப்படுகிறது. கதிரியா தரீக்காவே இஸ்ஸத்தீன் அல்கஸ்ஸாமை உருவாக்கி பதப்படுத்திய பாசறை என்பதை எவராலும் நிராகரிக்க முடியாது.
 
Information by Fazhan Nawas
0 comments

துருக்கியின் தலைமைத்துவமும் - நக்ஷபந்தியா தரீக்காவும்

துருக்கியின் தலைமைத்துவமும் - நக்ஷபந்தியா தரீக்காவும்


துருக்கியின் நவீன இஸ்லாமியத் தலைமைத்துவத்தின் காரண கர்த்தாவாக பேராசிரியர் (முனைவர்) நிஸாமுத்தீன் எர்பஹான் அவர்களை குறிப்பிட முடியும். கிலாபத்தின் வீழ்சிக்குப் பின்னரான துருக்கியின் முதலாவது இஸ்லாமிய பிரதமர். நக்ஷபந்;தய்யா தரீக்காவின் பாசறையும், செய்ஹ்க் அந் நாஸிம் அல் ஹக்கானி போன்ற ஆன்மீக வழிகாட்டிகளின் வழிகாட்டலும் துருக்கியில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற மனோநிலை அவர்களிடம் தொடர்ந்தும் வளர்ந்தது. இதற்காக பல தடவைகள் சிறை சென்றார். அவரது கட்சியும் தடைசெய்யப்பட்டது. எர்பஹானின் வழிகாட்டலில் வளர்ந்த துருக்கியின் ஜனாபதி அப்துல்லா குல், பிரதமர் தையிப் எர்துகான் போன்றவர்களும் நக்ஷபந்தியா தரீக்காவைச் சேர்ந்தர்கள். நவீன வஹாபிஸத்திற்கு இது ஒரு பாடமாக அமையட்டும். இமாம் மஹ்திவரும் வரும் வரை துருக்கியின் தலைமைத்துவம் நக்ஷபந்தியா தரீக்காவிடமே இருக்கும் இன்ஷா அல்லாஹ்


Information : Fazhan Nawas
0 comments

அலவி அல் மாலிகி

 அலவி அல் மாலிகி

எமது சமூகம் இழந்த மிகப் பெரும் புலமைச் சொத்து பேராசிரியர் "அலவி அல் மாலிகி" அவர்கள்.பிறந்தார்,வாழ்ந்தார்,இறந்தார் என்று இல்லாமல் நபிமார்களின் வாரிசாக வாழ்ந்து காட்டியவர் இன்றை இமாம்களுக்கு தலைசிறந்த முன்மாதிரி. 15ம் வயதில் புனித ஹரம் ஷரீபில் ஹதீஸ் துறையை போதிக்க ஆரம்பித்தார்கள். சவுதி அரேபிய வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் கலாநிதிப்பட்டத்தை பெற்ற பெருமையும் அன்னாரை சாரும். அல் அஸ்ஹர், கலாநிதிப்பட்டம் வழங்க இமாம் அவர்களை தேடிவந்த போது அவர்களுக்கு வயது 25. சிறந்த நீதித்துறை அறிஞர். மஹ்ரிபுக்கும் - இஷாவுக்கும் இடையில் அன்னார் நடத்திய வகுப்பில் நாளாந்தம் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை 500. செய்யித் மாலிகி எம்மை விட்டு பிரிந்து 6 வருடங்கள். ஆறு தசாப்தங்கள் மட்டும் எம்முடன் வாழ்நதார் சவுதி அரேபியாவில் கடந்த நூறுவருடங்களில் இடம் பெற்ற ஜனாஸாக்களில் கூடுதலானோர் பங்கேற்ற ஜனாஸா செய்யித் அலவி அல் மாலிகி அவர்களுடையதாகும். ஜனாஸாவில் பங்கேற்றோர் 2 இலட்சம் பேர். அன்னார் மறைந்து மூன்று நாட்களுக்கு சவுதி இலத்தியரனியல் ஊடகங்கள் கிராத்தை மாத்திரம் ஒலிபரப்பின. அல்லாஹ்தஆலா அன்னாரது சேவைகளை பொறுந்திக் கொள்வானாக
0 comments

செய்க் முஹம்மத் அல் யாகூபி

 செய்க் முஹம்மத் அல் யாகூபி

"செய்க் முஹம்மத் அல் யாகூபி" தமிழ் பேசும் முஸ்லிம்களால் அறியப்படாமல் இருக்கலாம், மத்திய கிழக்கிலும், இஸ்லாமிய உலகிலும் அவரது வகிபாகம் பிரதானமானது. சிரிய அரசாங்கம், மக்கள் மீது நடத்திய தாக்குதல்களை பகிரங்கமாக கண்டித்தார். டமஸ்கஸில் அமைந்துள்ள அல் ஹசன் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை குத்பா நடத்துவதற்கு தடைவிக்கப்பட்டது. சிரியாவின் பொது இடங்களில் உரை நிகழத்வதற்கும். தடைவிதிக்கப்பட்டது. இஸ்தாம்புல் நகரில் இடம் பெற்ற சிரியா தொடர்பான மாநாட்டில் விஷேட பேச்சாளராக கலந்து கொண்டார்கள். அண்மையில்,மொரோக்கோவில் அவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இறைவன் அன்னாரைப் பொருந்திக் கொள்வானாக.

'நான் அதிகாரத்தை வழங்குமாறோ,ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்துமாறோ கோரவில்லை. மாறாக மக்களை கொலை செய்வதை நிறுத்தவேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்" - செய்க் முஹம்மத் அல் யாகூபி
 
;