Saturday, February 22, 2014 0 comments

தென் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம்

தென் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம்

Dr.Shukri
தென் இலங்கை முஸ்லிங்களின் வரலாறானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் ஓர் அங்கமாகும். எனவே, இலங்கை முஸ்லிங்களின் வராறு கீழைத்தேய உலகிற்கும் மேற்குலகிற்குமிடையிலான வணிகத் தொடர்பின் பின்னணியிலும், பாரசிக வளைகுடாப் பிரதேசத்திற்கும் சீனாவிற்குமிடையிலான வணிகத் தொடர்பின் பகைப்புலனிலும் ஆராயப்படுவது போன்று, தென் இலங்கை முஸ்லிங்களின் வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பின்னணியிலேயே நோக்கப்படல் வேண்டும்.வரலாற்றுப் பின்னணி மேற்குலகிலிருந்து கிழக்கிற்கான கடல் பயணத்தை மேற்கொள்வதற்கு நன்னம்பிக்கை முனையூடான பாதை (CAPE ROUTE) கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், மேற்கையும், கிழக்கையும் பிணைக்கும் இரண்டு



முக்கிய கடற்பாதைகளாக பாரசிக வளைகுடாவும், செங்கடலும் விளங்கின. இவற்றை அதன் இரு மருங்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ள அரபுத் தீபகற்பத்தின் கேந்திர நிலையானது, 'இந்து சமுத்திர வணிகம்' என அழைக்கப்பட்ட இவ்வணிகத்தில் அரபிகள் மிக முக்கியத்துவ இடத்தை வகிக்கும் நிலைய அளித்தது. பாரசீக வளைகுடாவிற்கும், சீனாவிற்குமிடையில் அமைந்திருந்த இந்த வணிகப்பாதையில் துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை வகித்தன. இந்த துறைமுகங்கள் வணிக மத்திய தலங்களாக விளங்கின. இந்த வணிக மத்திய நிலையங்களின் அமைப்பு, முக்கியத்துவம் ஆகியவற்றை இந்து சமுத்திரத்தின் 'காற்று வீசும் முறை' யே (WIND SYSTEM) நிர்ணயித்தது.

உதாரணமாக பாரசிக வளை குடாவிலிருந்து,  ஸுமத்திராவிற்கு ஒரே பருவப் பெயர்ச்சிக் காற்றை (MONSOON WIND)  ப் பாயன்படுத்திப் பயணத்தை மேற்கொள்ளுதல் சாத்தியமற்றதாகக் காணப்பட்டது. எனவே, இக்கப்பல்கள் இந்தியக் கரையிலோ அல்லது இலங்கைக் கரையிலோ உள்ள துறைமுகங்களில் தரித்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. வியாபாரச் சரக்குகள் காணப்படல், பாதுகாப்பான துறைமுகங்கள், உணவும் குடிநீரும் காணப்படல், கப்பல்களைப் பழுது பார்ப்பதற்கான வசதிகள் உள்ளமை ஆகிய அம்சங்களை இத்துறைமுகங்கள் தெரிவு செய்யப்படுவதை நிர்ணயித்தன.

பாரசீகர், அராபியர், சீனர் ஆகியோர் பங்குற்றிய இந்த இந்து சமுத்திர வணிகத்தில் இலங்கையின் வடகிழக்கு, மேற்கு தெற்கு கரையோரங்களில் காணப்பட்ட துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை வகித்தன. திருகோணமலை, கொழும்பு, மன்னார் என்பன இவ்வகையில் முக்கிய துறைமுகங்களாக விளங்கின. இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது காலி போன்ற இயற்கைத் துறைமுகங்களை மட்டுமன்றி பல பாதுகாப்பான குடாக்களையும் (Sheltered Bays) கடல் சார்ந்த உட்பிரதேசங்களையும் (INLETS) கொண்டுள்ளது. இந்த அமைப்பைப் பெற்றிருந்த தெற்குக் கரையிலுள்ள 'நிலவளாதித்த' என அழைக்கப்பட்ட மாத்தறை 'வலுகாமம்' என அழைக்கப்பட்ட வெலிகாமம் 'பீமாதித்த' எனப்பெயர் பெற்ற பெருந்தோட்ட ஆகிய பிரதேசங்கள் கால வளர்ச்சியில் வணிகத் துறைமுகங்களாக வளர்ச்சியடைந்தன.

இந்து சமுத்திர வணிகத்தில் பாரசிகர்கள் மிக ஆரம்பகாலத்திலிருந்தே மிக முக்கிய இடம் வகித்தனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் பாரசிக முஸ்லிம் வணிகர்கள் சீனாவிலுள்ள கண்டன் (CANTON) துறைமுகம் வரை பயணம் செய்தனர். கி.பி. 717ம் ஆண்டு வஜ்ரபோதி என்பார் இலங்கையிலிருந்து சுமாத்ரா வரை முப்பத்து ஐந்து பாரசிகக் கப்பல்களைக் கொண்ட ஒரு கூட்டத்தோடு பயணம் செய்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது. பாரசிகரைப் போன்றே அராபியரும் இந்து சமுத்திர வணிகத்தில் சிறப்பிடம் பெற்றனர்.

இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் பாரசிகர், அராபியர் என்றவகையில் அவர்கள் இனங்காணப்பட்டாலும், இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர், குறிப்பாக கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் பாரசிகர், அராபியர், ஆகிய இருசாராரும் அராபியர் என்றே இனங்காணப்பட்டனர். இலங்கையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் கணிசமான அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டதை வரலாற்றாசிரியர் அவ் - பலாஸசரியின் குறிப்புக்கள் உணர்த்துகின்றன.

இலங்கையின் கரையோரத் துறைமுகங்களைப் பொறுத்தளவில் ஆரம்பகாலப் பிரிவில் வடக்குப் பகுதியில் காணப்பட்ட துறைமுகங்கள் இவ்வணிகத்தில் முக்கியம் இடம் வகித்தன. அண்மையில் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள், இக்காலப்பிரிவில் இலங்கைக்கும் பாரசிக வளை குடாவுக்குமிடையில் நடைபெற்ற வணிகத்தில் திருகோணமலை, மாந்தைத் துறைமுகங்கள் முக்கிய இடம் வகித்ததை உறுதிப்படுத்துகின்றன.

கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொராம் நூற்றாண்டு வரையிலாக காலப்பிரிவின் மத்திய கிழக்கைச் சார்ந்த மட்பாண்டங்களும், இதேகாலப்பிரிவின் சீனாவைச் சார்ந்த மட்பாண்டங்களும் மாந்தையில் கண்டுபிடிக்கபட்டதாது, இக்காலப்பிரிவில் மாந்தை ஒரு முக்கிய வணிக மத்தியதலமாக விளங்கியதைக் குறிக்கின்றது. கி.பி. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட அரபுச் சிவாசனமும், இதேகாலப்பிரிவைச் சேர்ந்த புளியந்தீவு அரபுச் சிவாசனமும், இக்காலப்பிரிவில் கொழும்பு, மன்னார் ஆகிய பிரதேசங்கள் அரபு வணிகர்களின் முக்கிய குடியேற்றங்களாக விளங்கின என்பதற்குச் சான்றாக அமைகின்றன. திருகேபணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பொலன்னறுவை ராஜதானியின் இறுதிக்காலப் பிரிவைச் சேர்ந்த அரபுச் சிலாசனம் அது ஒரு முக்கிய அரபுக் குடியேற்றமாக இக்காலப் பிரிவில் விளங்கியதற்குச் சான்றாக அமைகின்றது. இவை கி.பி. 10, 11, 12ம் நூற்றாண்டுகளில் இலங்கை – அராபிய வணிகத்தில் வடக்குப் பகுதியைச் சேர்ந்த துறைமுகங்கள் முக்கிய இடத்தை வகித்ததை உணர்த்துகின்றன.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பொலன்னறுவை ராஜதானியின் வீழ்ச்சியோடு இலங்கையின் அரசியல் தலைநகரம் தீவின் தென்மேற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அத்தோடு, கடல் வணிகத்தின் மத்திய நிலையும் வங்காள விரிகுடாவிலிருந்து அராபிய கடல் பிரதேசத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இலங்கையின் அரசர்கள் தென்மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த தலைநகரங்களால் கவரப்படலாயினர்.

இக்காலப்பிரிவிலேயே பேருவலை, காலி, வெலிகாமம், மாத்தறை போன்ற தென்மாகாண கடல் துறைமுக நகரங்களில் அரபு வணிகர்கள் பெருமளவு குடியேற ஆரம்பித்தனர். இக்காலப்பிரிவில் சீனாவிலிருந்து பாரசிக வளைகுடாவினை ஒரு சீனக் கப்பலில் பயணம் செய்த மார்கோபோலோ இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெருமளவு அரபு வணிகர்கள் காணப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

கி.பி. 13, 14ம் நூற்றாண்டுகளில் தென்னிலங்கையில் முஸ்லிங்கள் வணிகத்துறையில் மிகச் சிறப்புற்று விளங்கியதையும், குறிப்பாக அவர்களின் முக்கிய வணிக மத்திய நிலையமாக காலி விளங்கியதையும் 1344ல் இலங்கையைத் தரிசித்த அரபுப் பயணி இப்னு பதூதாவின் குறிப்புக்கள் மூலம் நாம் அறிய முடிகின்றது. இப்னு பதூதா கொழும்பில் 'ஜலஸ்தி' என்னும் பெயருடைய ஒரு கப்பல் தளபதியைச் சந்தித்ததாகவும் அவருடன் 500 அபிஸீனியர்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார். 'ஜலஸ்தி' என்ற பதம் துறைமுகத்தோடு தொடர்புடைய பதமாக ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. இப்னு பதூதாவின் குறிப்புகள் தேவந்துறை (தெவிநுவர) முஸ்லிம்களின் ஒரு முக்கிய வணிகக் குடியேற்றமாக விளங்கியதை உணர்த்துகின்றன.

தெவந்துறையை 'தீனவார்' எனக் குறிப்பிடும் இப்னு பதூதா அங்கு பல முஸ்லிம்கள் வணிகர்கள் காணப்படுவதாக அவரது பிரயாண நூலில் கூறுகின்றார். காலித் துறைமுகத்தில் முஸ்லிம்களின் வணிகக் கப்பல்கள் அக்காலப்பிரிவில் கணிசமானளவு காணப்பட்டிருக்கலாம் என்பதனை இப்னு பதூதாவின் குறிப்புகளிலிருந்து நாம் ஊகித்து உணரமுடிகின்றது. காலியின் தான் இப்ராஹிம் என்னும் பெயருடைய கப்பல் தலைவரொருவரைச் சந்தித்தாகவும், காலி நகரில் அவரது வீட்டில் விருந்தினராகத் தான் தங்கியதாகவும் அவர் தனது பிரயாண நூலில் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பாக தென்மாகாணத்தில் மிகப் பரவலாக சிங்கள மக்கள் மத்தியில் வழக்கிலுள்ள சிங்களப் பெயரான 'ஸஹபந்து' (SAHABANDU) என்னும் சிங்களப் பெயர் 'ஷாஹ் பந்தர்' (SHAH BANDAR) என்ற பாரசிகப் பெயரின் சிங்கத் திரிபேயாகும் என்ற உண்மையும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். பாரசிக மொழியில் 'ஷாஹ்' எனில் அரசன் அல்லது தலைவன் எனவும், 'பந்தர்' எனில் துறைமுகம் எனவும் பொருள்படும். எனவே, 'ஷாஹ் பந்தர்'எனில் துறைமுகத் தலைவன் என்பது கருத்தாகும். இது முஸ்லிம்கள் தென்னிலங்கைப் பிரதேசத்தில் முக்கிய துறைமுகங்களில் தலைவர்களாகப் பணிபுரிந்துள்ளார்கள் என்பதற்குச் சான்றாக உள்ளது. 1911ம் ஆண்டு காலி கிறிப்ஸ் வீதியில் காலி மாகாண என்ஜினியராகப் பணிபுரிந்த எச். எப். டொமலின் (TOMALIN) கண்டெடுத்த சீனம், பாரசிகம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் அமைந்துள்ள காலி மும்மொழிச் சிலாசதைப் (GALLE tri  lingual inscription)  முக்கியம் பெறுகின்றது.

கி.பி. 1410ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த கப்பல் தளபதி செங்ஹோ (CHENG HO) வினால் பொருத்தப்பட்ட இச்சிலாசனம் பாரசிகம், தமிழ், சீனம் ஆகிய மூன்று மொழிகளிலும் அமைந்துள்ளது. பௌத்த, இந்து, முஸ்லிம்களின் வணக்கத்தலங்களுக்கு சீன மன்னன் அனுப்பி வைத்த அன்பளிப்புகள் பற்றி இச்சிலாசனம் குறிப்பிடுகின்றது. சீனமொழியில் காணப்படும் குறிப்புகள் புத்தரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. தமிழில் 'தேனாவரை – நயினார்' என்ற வார்த்தை உள்ளது. இதனைப் பேராசிரியர் பரணவிதான தெவிந்துறைக் கடவுளைக் (GOD OF DEUINUWARA) குறிப்பதாகக் கொள்கின்றார். பாரசிக வரிகள் பெரும்பாலும் தெளிவற்றுக் காணப்படுகின்றன. இதனை வாசித்து இனங்கண்ட இந்தியாவைச் சேர்ந்த, ஜனாப் குவாஜா முஹம்மத் அஹ்மத், இதில் 'நுருல் இஸ்லாம்' இஸ்லாத்தின் ஒளி என்னும் சொல் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார்.

 இந்த சிலாசனம் காலியில் வாழும் வணிர்களின் நன்மை கருதியே பொருத்தியிருக்கப்படல் வேண்டும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலங்கையில் வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு வணிகர்களின் கையிலிருந்ததையும், இவ்வணிகத்தில் பாரசிக முஸ்லிம்கள் கணிசமான இடத்தை வகித்தமையும், அவர்கள் காலியில் காணப்பட்டதையும் இச்சிலாசனத்தின் மூலம் நாஙகள் அனுமானிக்க முடிகின்றது. குடியேற்றங்கள் காணப்பட்டதற்கான சான்றுகள், இக்காலப்பிரிவில் சிங்கள மொழியில் எழுந்த 'ஸந்தேஸ காவிய' என்னும் தூது இலக்கியங்களில் காணப்படுகின்றன.

பராக்கிரமபாகு மன்னனின் காலப்பிரிவில் (1440 – 1450) இயற்றப்பட்ட 'கோகில ஸ்ந்தேஸய' 'கிராஸந்தேய' ஆகிய நூல்கள் சோனகப் பெண்களை 'யொன்வியர்' எனக் குறிப்பிடுவதுடன், 'மஹாவெலி கம்' (வெலிகாமம்) முஸ்லிம் குடியேற்றம் பற்றியும் குறிப்பிடுகின்றது.

கி.பி. பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் மேற்குக் கரையோரப் பகுதியில் உள்ள துறைமுக நகரங்களான கொழும்பு, களுத்துறை, பேருவலை, காலி, வெலிகாமம், மாத்தறை ஆகிய இடங்களில் பெருமளவு முஸ்லிம் குடியேறியிருந்தனர். இக்காலப்பிரிவில் இந்து சமுத்திரா வணிகத்தில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்கின்றது.

இந்து சமுத்திரத்தில் இலங்கையில் அரபுக் குடியேற்றங்கள் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்த தென்னிந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதியான மலைபார் பிரதேசத்திலும், கிழக்குக் கரையான மஃபர் பிரதேசத்திலும் அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டன. மஃபர் பிரதேசத்தின் பிரதான அரபு வணிகக் குடியேற்றமாக காயல்பட்டணம் விளங்கியது. இப்பிரதேசத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கும், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குமிடையிலான அரபு நாணயங்களை கால்டுவெல் (CALDWELL) கண்டுபிடித்த காயல்பட்டணம் பிரதேசம் மிக ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு முக்கிய அரபு வணிக மத்திய தலமாக விளங்கியதைக் குறிக்கின்றது. இதுபோன்றே பஸார் பகுதியின் முக்கிய துறைமுகமான சிரங்க நூர் (CIRANGANORE) மிக ஆரம்பகாலத்திலிருந்தே அரபு வணிகர்களின் ஒரு முக்கிய குடியேற்றமாக விளங்கியது.

'காயல்' என அழைக்கப்பட்ட காயல்பட்டணத் துறைமுகம் இலங்கை வணிகத்தில் முக்கிய இடம் வகித்தது. சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் தமிழகத்தில் முஸ்லிம்களின் முக்கிய வணிக மத்தியதலமாக காயல்பட்டணம் வளர்ச்சியடைந்தது. காயல்பட்டண வணிகர்கள் இலங்கையில் மேற்குக் கரையோரத்தில் பல துறைமுகங்களை உள்ளடக்கிய வகையில் அவர்களது வணிகத்தை பரவலாக்கியிருந்தனர். பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய முஸ்லிம் வணிகர்கள் இந்து சமுத்திர வணிகத்தில் முக்கிய இடம் வகித்தனர்.

காலியில் கண்டுபிடிக்கப்பட்ட 1401 ஆண்டைச் சேர்ந்த செங்ஹோவின் (Chamy – Ho) வின் மும்மொழிச் சிலாசனத்தில் பாரசிக, சீன மொழிகளுடன், தமிழ் மொழியும் இடம்பெற்றிருப்பதானது இக்காலப்பிரிவில் தமிழ் தென்-கிழக்காசிய, இந்து சமுத்திர வணிக மொழிகளுள் ஒன்றாக விளங்கியதை உணர்த்துகின்றது. இக்காலப்பிரிவிலேயே இலங்கை முஸ்லிம்களுக்கும் குறிப்பாக தென்னிந்தியாவின் மேற்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த, மலபார், காயல்பட்டணம், கிழக்கரை முஸ்லிம்களுக்கிடையில் மிக நெருங்கிய வணிகத் தொடர்பும், இறுக்கமான கலாசார, பண்பாட்டு இணைப்பும் ஏற்படுகின்றது.
கி.பி. 1505ம் ஆண்டு போர்த்துக்கேயரின் வருகையோடு, இலங்கை முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய உலகுக்கும் இடையிலான கலாசார, பண்பாட்டுத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இலங்கை முஸ்லிம்களுக்கும், தென் இந்தியரின் மஃபர் பகுதியைச் சார்ந்த (காயல்பட்டணம்) முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்ட கலாசார, பண்பாட்டுத் தொடர்பே இலங்கை முஸ்லிம்களின் மத, கலாசார, பண்பாட்டுத் தனித்துவத்தைப் பாதுகாக்கத் துணைபுரிந்தது.

இலங்கையில் போர்த்துக்கேயரின் வருகை நிகழ்ந்த காலப்பிரிவில், இலங்கையின் தென், தென்மேற்குக் கரைப்பகுதியில் கொழும்பு, களுத்துறை, பேருவலை, அலுத்கம, காலி, வெலிகமை, மாத்தறை ஆகிய பகுதிகளில் முஸ்லிம் குடியேற்றங்கள் மிகப்பரவலாகக் காணப்பட்டமே போர்த்துக்கேய வரலாற்று ஆவணங்கள் மூலமாக நாம் அறிய முடிகின்றது என்ற கருத்தை கலாநிதி டீ. பி. அபயஸிங்ஹ தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார். இந்த துறைமுக நகரங்களில் முஸ்லிம்கள் அவர்களது சமூக பரிபாலன விடயங்களுக்காக தலைவர்களை நியமித்திருந்தனர். 1614 ஆண்டு அலுத்கமையில் முஸ்லிம் சமூகம் மிக ஸ்திர நிலையில் மூன்று தலைவர்களைக் கொண்டு இயங்கியது.

போர்த்துக்கேய வரலாற்று ஆவணங்கள் 'தோம்பு' (TOMBO)  என அழைக்கப்படுகின்றன. இவற்றுள் ஓர் ஆவணமான ருவா டீ மோரோஸ் (Rua dos Mouros) என்னும் தோம்பு வெலிகாமத்தில் முஸ்லிம்களுக்கென்றே ஒரு தனிப்பட்ட வீதிகள் காணப்பட்டன என்றும், மாத்தறையில் முஸ்லிம்கள் நகரத்தின் மத்திய சந்தைப் பிரதேசத்திலே (Baza area) முக்கியமாக வாழ்ந்தனரென்றும் குறிப்பிடுவதாக கலாநிதி அபயஸிங்ஹ கருத்துத் தெரிவிக்கின்றார்.

போர்த்துக்கேயர் காலப்பிரிவில் தெற்குக் கரையோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பல வகையில் தொல்லைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டனர். பலவகையிலும் முஸ்லிம்களின் வணிக முயற்சிகளைச் சீர்குலைக்கும் முயற்சிகள் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சூழலில் கூட தென்னிலங்கை முஸ்லிம்கள் தமது பொருளாதார பலத்தையும், இஸ்லாமிய தனித்துவத்தையும் பேணி வாழ்ந்தனர்.

கி.பி. 1658ல் இலங்கை டச்சுக்காரரின் ஆட்சிக்கு உட்பட்டது. முஸ்லிம்களைப் பொறுத்தளவில் டச்சுக்காரரும், போர்த்துக்கேயரின் கொள்கையையே பின்பற்றினர். வணிகத் துறையின் முஸ்லிம்களின் செல்வாக்கை முறியடிப்பதை அவர்களது முக்கிய நோக்கங்களுள் ஒன்றாக கொண்டு டச்சுக்காரர் செயல்புரிந்தனர். கி.பி. 1650 காலி முஸ்லிம்கள் தையல் தொழில் மூலம் இலாபமீட்டுவதை அவதானித்த அவர்கள், அந்த வாய்ப்பினை முஸ்லிம்களிடமிருந்து பார்த்து பரங்கியருக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாக்கு வியாபாரத்தையும் முஸ்லிம்களின் கையிலிருந்து பரங்கியருக்கு மாற்றும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

காலி, வெலிகாமம், மாத்தறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் உள்நாட்டிற்குச் சென்று நெல், பாக்கு முதலியவற்றை வாங்கி கண்டி இராசதாணிகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் உள்நாட்டுக்குச் சென்று வியாபாரச் சரக்குகளை வாங்குவதைத் தடுக்கும் முயற்சிகளை டச்சு ஆட்சியாளர் மேற்கொண்டனர். முஸ்லிம்கள் தங்களது செல்வாக்கைப் பரவச் செய்ததைத் தடுக்கும் நோக்கோடு காலி, வெலிகாமம், மாத்தறையைச் சேர்ந்த முஸ்லிம்கள் நகர எல்லையைவிட்டு வியாபாரத்திற்காக வெளியேறக்கூடாது என 1659ம் ஆண்டு ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

வணிகத்துறையில் மட்டுடன்றி மத விவகாரங்களைப் பொறுத்தளவிலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் டச்சுக்காரர்களின் கீழ் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினர். டச்சு அதிகாரியான மட்ஸியூகொ (Matsuyeker)'முஹம்மதிய மதத்தின் சாபத்தை ஒழித்துக் கட்டி, கிறிஸ்துவ மதத்தை பரப்புவதை' தனது முக்கிய கொள்கைiயாகப் பிரகடனப்படுத்தினார். இதற்கேற்ப டச்சு அதிகாரி வான் கோயென்ஸ் (VAN GOENS)  மாத்தறை முஸ்லிம்களுக்கு அவர்களது மதக்கடமைகளை நிறைவேற்ற அனுமதியளிக்க வேண்டாமென்றும் நகரத்தின் எல்லைக்குற்பட்ட பிரதேசத்திலோ அல்லது வெளிப் பிரதேசங்களிலோ முஸ்லிம்களின் மதத்தலைவர்களுக்கு இடமளிக்க வேண்டாமென்றும் கட்டளை பிறப்பித்தார். ஆனால் காலப்போக்கில் தன் யதார்த்த நிலையை உணர்ந்த டச்சுக்காரர் அவர்களது பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்துவதில் முஸ்லிம்களை புறக்கணிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தனர்.

எனவே, முஸ்லிம் சமூகத்துடன் தங்களது தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளத் துணைச்சாதனமாக முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் அதிகாரிகளை (Meadman) நியமித்தனர். கி.பி. 1762ம் ஆண்டு கொழும்பில் முஸ்லிம்களின் அதிகாரியான உதுமான் கண்டி மேஸ்திரி அய்துருஸ் லெப்பை மரிக்கார் நியமிக்கப்பட்டார். இதுபோன்றே டச்சுக்காரரின் ஆட்சியின் இறுதிக்காலப்பிரிவில் காலி, மாத்தறை ஆகிய நகரங்களிலும் இத்தகைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

1789ம் ஆண்டு சின்ன லெப்பை மரிக்கார் சீதக்காதி லெப்பை மாத்தறை முஸ்லிம்களின் தலைவராக நியமிக்கப்பட்டதாக டச்சு ஆவணங்கள் குறிப்பிடுவதாக கலாநிதி ஜே.பி. கொத்தலாவலை கருத்துத் தெரிவிக்கின்றார். வான் இம்ஹோப் (Van Imhoff)என்னும் டச்சு அதிகாரி 1733ல் மாத்தறையில் முஸ்லிம் கமிஷனர்களை நியமித்தார். இவர் (Moor Commissioner) என அழைக்கப்பட்டனர். டச்சுக்களின் ஆட்சியில் கீழ் உள்ள பிரஜைகள் மாதத்தில் சிலநாட்கள் ஏதாவதொரு அரசாங்கப் பணியில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டது. இது ஊழியம் என அழைக்கப்பட்டது. இத்தகைய ஊழிய வேலைக்கு ஆட்களைத் திரட்டி ஒழுங்குபடுத்துவதே டச்சுக்காரர் நியமித்த அதிகாரிகளின் பணியாக அமைந்தது.

காலியில் உள்ள முஸ்லிம் அதிகாரிகள் காலித் துறைமுகத்தில் பொருட்களை கப்பலில் ஏற்றுதல், இறக்குதல் போன்ற பணிகளுக்கு போதிய ஆட்களைத் திரட்டாத பட்சத்தில் அவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படுவது மட்டுமன்றி, அந்த அதிகாரிகளையே காலில் விலங்கிடப்பட்டு வேலை செய்யும்படி பணிக்கப்படுவார்களென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இவ்வாறு முஸ்லிம்களை அடக்கி, ஒடுக்கி ஆட்சி செய்த டச்சுக்கார் அவர்களது ஆட்சியின் இறுதிக் காலப்பிரிவில் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் ஓரளவு சகிப்புத் தன்மையைக் கடைப்பிடித்தனர். 1789ல் ஆரம்பித்த பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முஸ்லிம்களுக்கு டச்சுக்காரரால் இழைக்கப்பட்ட அநீதிகளை நிவர்த் திக்கும் முயற்சிகள் ஓரளவு மேற்கொள்ளப்பட்டன.
தென்னிலங்கை முஸ்லிம்களின் குடிசனப் பரம்பல் பற்றி நோக்குமிடத்து, போர்த்துக்கேயர் டச்சுக்காரர்களின் ஆட்சிக்காலப்பிரிவில் காலி, மாத்தறை போன்ற முக்கிய நகர்களில் முஸ்லிம்கள் அவர்களின் அடக்கு முறைக்கு ஆளாகிய போது கரையோரப் பகுதியைத் தாண்டி உள்நாட்டிலுள்ள சிங்களக் கிராமங்களை நோக்கி நகர்த்திருக்கலாம் என்பதனை அனுமானிக்க முடிகின்றது. கிருந்தை, மீயல்லை, யக்கலமுல்லை, கொடபிடிய போன்ற கிராமங்கள் இவ்வகையிலேயே தோற்றமெடுத்திருத்தல் வேண்டும் என நாம் கொள்ளலாம்.
தென்னிலங்கை முஸ்லிம்களின் வரலாற்றோடு இணைந்து காணப்படுவது அவர்களின் கலாசாரப் பாரம்பரியமாகும். தென்னிலங்கை முஸ்லிம்களில் யெமன் நாட்டின் ஹஸ்ரமௌத் கலாசாரத்தின் செல்வாக்கு கணிசமாகக் காணப்படுகின்றது. இந்த ஹஸ்ரமீ கலாச்சாரம் யெமன் நாடடுடனான நேரடித் தொடர்பு மூலமும், மலபார், காயல்பட்டணம், கிழக்கரை போன்ற தமிழகத்தின் முக்கிய முஸ்லிம் வணிக பண்பாட்டு மத்திய தலங்கள் மூலமாகவும் அதன் தாக்கத்தை தென் இலங்கை முஸ்லிம்களில் ஏற்படுத்தியது.

'அஹ்லுல் பைத்' என்னும் நபி (ஸல்) அவர்களின் பரம்பரையினர், ஸுபி மெர்ரானிகள், தரிகாக்கள் மூலம் ஹஸ்ரமௌத் கலாசாரத்தின் தாக்கம் இப்பிரதேசத்தில் ஏற்பட்டது. இத்துறையில் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படின் கிழக்காபிரிக்கா, இந்தோனேசியா ஆகிய இடங்களில் காணப்படும் ஹஸ்ரமி கலாசாரத்திற்கும் தென்னிலங்கை முஸ்லிம்களின் கலாசாரத்திற்குமிடையில் சில ஒருமைப்பாடுகளை நாம் இனம்காண முடியும். ஆனால், இது ஒரு தனிப்பட்ட ஆய்வை வேண்டி நிற்கும் துறையாகும்.
பொதுவாக நோக்குமிடத்து தென்னிலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம் மிக பூர்வீகமானது: பாரம்பரியச் சிறப்பு மிக்கது: கி.பி. 1505 க்கும் கி.பி. 1796 க்குமிடையில் போர்த்துக்கேயர், டச்சுக்காரரின் அடக்கு முறைகளை எதிர்கொண்டு தங்களது இஸ்லாமிய தனித்துவத்தைப் பாதுகாத்து இன்றைய தலை முறையினருக்கு வாரிசாக அளித்த எமது மூதாதையர்கள் எங்களால் என்றும் நன்றிக்கடனுடன் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர்.

Via : http://drshukri.net/
0 comments

கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும்

கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும்


0 comments

மேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக அமையும்! – ஷாபி ரஹீம்

மேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக அமையும்! – ஷாபி ரஹீம்


முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான வழங்கிய விசேட செவ்வி

நேர்காணல் :- எம். இஸட்.ஷாஜஹான் 
Safi_Raheem
உங்களது அரசியல் பிரவேசம்  மற்றும் வெற்றிகள் பற்றி கூறுங்கள் ?
நான் வர்த்தகத்துறையில்  ஈடுபட்டுக்  கொண்டிருந்த காலப் பகுதியில்  2004 ஆம் ஆண்டு  நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில்  போட்டியிடுமாறு புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய  முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் ஜனாப் நியாஸ் என்னை அந்த தேரத்ல் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார்.பின்னர் அவர் என்னை கட்சித் தலைவர் ரஹுப் ஹக்கீமுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பின்னர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 3001 விருப்பு வாக்குகள் பெற்று மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். பத்து வருட இடைவெளியின் பின்னரே எனது வெற்றியின் மூலம் கம்பஹா மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் மேல் மாகாண சபைக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்தது.  அந்த தேர்தலில் மேல் மாகாண சபைக்கு எமது கட்சியின் சார்பில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர்.மாகாண சபை உறுப்பினராக  தெரிவு செய்யப்பட்ட பின்னர் நான் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் காரணமாக மீரிகமை, பியகம, நீர்கொழும்பு உட்பட கம்பஹா மாவட்ட சிறுபான்மையின மக்கள் நன்மையடைந்தனர். அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற  மேல்மாகாண சபை தேர்தலில் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிட்டு ன் 12 ஆயிரத்து 344 விருப்பு வாக்குள் பெற்று வெற்றி பெற்றேன். 2004 ஆம் ஆண்டு இடம்றெ;ற தேர்தலில் எமது கட்சிக்கு மேல் மகாண சபையில் 16 ஆயிரத்து 621 வாக்குகள் கிடைத்தன. 2004 ஆம் ஆண்டு இடம்றெ;ற தேர்தலில் எமது கட்சிக்கு 18 ஆயிரத்து 14 வாக்குள் கிடைத்தன. எனது விருப்பு வாக்குள் 9343 வாக்குகளால் அதிகரித்தன.அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்  எமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. அந்த தேர்தலில்;  எமது கட்சியை பிரிதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் நான் போட்டியிட்டேன். அந்த தேர்தலில்  23 ஆயிரத்து 122 விருப்பு வாக்குகளைப்; பெற்றேன். இவ்வாறு எமது கட்சிக்கு கம்பஹா மாவட்டத்தில் வாக்கு வங்கி அதிகரித்ததோடு எனது விருப்பு வாங்குகளும் பல மடங்காக அதிகரித்தது.  இது எமது கட்ச்யின் மீதும் எனது சேலையின் மீதும் கம்பஹா மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.
எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மீண்டும் தலைமை வேட்பாளராக களமிறங்க இருக்கிறீர்கள். தனித்து போட்டியிடவுள்ள உங்களது கட்சி இந்த முறை கம்பஹா மாவட்டத்தில் தனது பிரிதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ளுமா?
நி;ச்சயமாக. நடைபெறவுள்ள தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் எனது வெற்றி நிச்சயம்.அது மட்டு;மல்ல இம்முறை கம்பஹா மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை நாஙகள் பெறுவோம். 2004 ஆண்டு முதல் மாகாண சபை உறுப்பினராக இருந்து தமிழ் பேசும் மக்களுக்காக நான் செய்த சேலையை யாவரும் அறிவர். நூன் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் எனது விருப்பு வாக்குகள் அதிகரித்துள்ளமை அதனை எடுத்துக் காட்டுகிறது.இந்த தேர்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற கிராம சேவகர் பிரிவுகள் இனங்காணப்பட்டு, எமது கட்சி;யின் வெற்றிக்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எமது கட்சிப் போராளிகள் எம்முடன் எப்போதும் போலவே உறுதுணையாக இருக்கிறார்கள்.நான் தினமும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து எனது சக்திக்கு உட்பட்ட வகையில் மக்களின் தேவைகளை தீர்த்து வருபவன். நான் மக்களை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் எமது கட்சிக்கு ஆதரவளிப்பது புரிகிறது. அவர்களின் ஆதரவும் உற்சாகமான வரவேற்பும் எமது கட்சியின் வெற்றியை கட்டியம் கூறுகிறது.
அப்படியானால் கம்பஹா மாவட்டத்தில்  உங்கள் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதித்துவம் எந்த தொகுதியைச் சேர்ந்தவராக இருப்பார் என நீங்கள் கருதுகிறீர்கள்?
புது வேட்பாளர்கள்  பலர் இந்த தேர்தலில் களமறிங்கவுள்ளனர். சகல இனங்களைச் சேர்ந்த வேட்பாளர்களையும் எமது கட்சியில் போட்டியிட வைக்கவுள்ளோம்.சிறப்பாக செயற்படக் கூடிய மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ளும் வேட்பாளர்கள்> அதிக விருப்பு வாக்களை பெறுவர். இந்த தொகுதியை சேர்ந்வர்தான்;  வெற்றி பெறுவார் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் கம்பஹாவில் இரண்டு ஆசனங்கள் எமக்கு கிடைக்கும் என்பது நிச்சயமாகும்.
இரண்டு தடைவை மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்து நீங்கள் சாதித்தது என்ன?
நான் மக்களுக்கு செய்த சேவைகளை சாதனையாக கருதவில்லை. எனது கடமை மற்றும் பொறுப்பாக கருதுகிறேன். இந்த ஒன்பது வருட காலப் பகுதியில் கம்பஹா மாவட்ட முஸ்லிம் தமிழ் மக்கள் எனது பிரதநிதித்துவம் மூலமாக பல நன்மைகளையும், சேவைகளையும் பெற்றறுள்ளனர். அது ஒரு நீணட் பட்டியலாகும். குறிப்பாக கூறுவதாயின், நீர்கொழும்பில் விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி மற்றும் அல்-ஹி;லால் மத்தியக் கல்லூரி ஆகியவற்றுக்கு முச்சக்கர வண்களை பெற்றுக் கொடுத்துள்ளமை> பாடசாலைகள் பலவற்றுக்கு போட்டோ கொப்பி இயந்திரங்களை பெற்றுக் கொடுத்துள்ளமை, பாடசாலைகள் சிலவற்றுக்கு கட்டிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளமை> விளையாட்டு உபகரணங்களைவ வழங்கியுள்ளமை> ஆளணி நியமனங்களை பெற்றுக் கொடுத்துள்ளமை, வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல்  உபகரணங்கள் வழங்கியுள்ளமை> அஹதியா பாடசாலைகளுக்கு தளபாடங்களை வழங்கியுள்ளமை> அஹதியா ஆசிரியர்களுக்கும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் கருத்தரங்குகள்  நடத்தியுள்ளமை என்பன கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு செய்துள்ள சேவைகள் சிலவாகும்.அதேபோன்று> மாகாண மற்றும் உள்ளுராட்சி  மன்றங்களின் கீழ் உள்ள வீதிகள் பலவற்றை புனரமைப்பு செய்து கொடுத்துள்ளமை> வீதி மின்சார விஸ்தரிப்பு வேலைத்திட்டங்கள்> குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதியுதவிகள் வழங்கியுள்ளமை, மலசல கூடங்களை அமைப்பதற்கான நிதியுதவிகளை வழங்கியுள்ளமை, இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழிலில் ஈடுபடுவதற்கான  பயிற்சிகள் வழங்கியுள்ளமை> மற்றும் சுய தொழிலுக்கான உபகரணங்களை வழங்கியுள்ளமை என பல வேலைத்திட்டங்கள் என்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை பயனாளிகளும் எமது கட்சியின் ஆதரவாளர்களும் நன்கு அறிவர்.
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்களின் இஸ்லாமிய சட்டங்கள் மீதும் கலாசாரங்கள் மீதும் பொது பலசோனா உட்பட  பேரினவாதிகள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் உரிமை மீறல்கள் அடக்கு முறைகள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கபூர்வமான வகையில் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
மேல்மாகாண சபையில் நானும் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள  எமது கட்சி உறுப்பினர் ஹர்சாத் நிசாம்தீனும்  இது தொடர்பில் குரல்கொடுத்துள்ளோம். எமது கட்சியின் அதியுயர் பீடத்திலும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக எமது கருத்துக்களை தெரிவித்துள்ளளோம்> இவ்விடயம் தொடர்பில் எமது கட்சி அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தே வருகிறது. அரசியலமைப்பில் சகல இன மக்களுக்கும் சம உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது. எமது  உரிமையை இன்னொரு சமூகத்தில் உள்ள சிறிய குழுவொன்று பறித்தெடுக்க முடியாது.முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகளின் செயற்பாடுகளுக்கு  நாங்கள் அவர்களின் பாணியில் நடவடிக்கை எடுத்தால் நாட்டில் குழப்பம் ஏற்படும். உதாரணமாக எமது கட்சித் தலைவர் ஆவேசமாக குரல் கொடுத்தால் கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மையாக வாழும் பெரும் பான்மையின சமூகம் பாதிக்கப்படும்.அதன் எதிர் விளைவு முழு நாட்டிலும் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம் மக்கள் பாரிய இழப்புக்களை சந்திக்;க நேரிடும். இன்னொரு இன வன்முறை ஏற்படும். நாங்கள் சாணக்கியத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. எமது தலைவர் பொறுப்புடனும் அரசியல் சாணக்கியத்துடனும் நடந்து கொள்கிறார். ஏனைய  அரசியல்வாதிகள் போன்று எமது தேசியத் தலைவர் பேச முடியாது. கொழும்பு மாவட்டத்திலிருந்து கொண்டு அரசியல் இலாபம் பெறும் நோக்கில் சில அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்கலாம். முஸ்லிம் காங்கிரஸின்  தேசியத் தலைவர் அவ்வாறு  கதைக்க முடியாது. அவர் தேசிய கட்சியின் தலைவராவார்.
மேல் மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளது. தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமா?
எமது கட்சி துணிவுடன் தனித்து போட்டியிடவுள்ளது. அது தனது சொந்தக் காலிலேயே தேர்தலில் நிற்கிறது. தேர்தலின் பின்னர் எமது தலைவரும் எமது கட்சியின் அதியுயர்பீடமும் எடுக்கும் தீர்மானத்திற்கிணங்க  அது தொடர்பில் அறிவிக்கப்படும். எமது கட்சி தனித்து போட்டியிடுவது கட்சியின் பலமாகவும் எமது சமூகத்தின் பலமாகவும் அமையும். பொது பலசேனா உட்பட சிங்கள பேரினவாத அமைப்புக்களும் கட்சிகள் சிலவும்  முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்;லிம்  அமைச்சர்கள் மீது முஸ்லிம்களில் பெரும்பாலானோர் கடும்  விசனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
முஸ்லிம்களுக்கு சேவை செய்யவும் முஸ்லிம்;;களின் உரிமைகளை நிலை நாட்டவும்  முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அது தொடர்பில்  குரல் கொடுக்கவும்  எமது கட்சி கடமைப்பட்டுள்ளது. பிரச்சினை தொடர்பாக ஆவேசமாக பேசுபவர்கள் > பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுபவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வன்;முறைகளை நாடுவதாகவே நான் கருதுகிறேன். அதனூடாக அவர்கள் அரசியல் இலாபம் தேடவே முயற்சி செய்கிறார்கள் பிரச்சினைகளை தீர்ப்பது அவர்களின் உண்மையான நோக்கமாக இருக்க முடியாது. முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை இல்லாததன் காரணமாகவே அங்கு குழப்பங்களும் இரத்தக் கறைகளும் தினம் தினம் அரங்கேறிவருகின்றன .இந்நிலையில் எமது நாட்டில் சிறுபான்மையினராக வாழும் நாங்கள் பெரும்பான்மையின மக்களுடன் புரிந்துணர்வுடனும் சகிப்புத் தன்மையுடனும் வாழ வேண்டும் . எங்களிடையே உள்ள ஒற்றுமையே எதிரிகளை தோல்வியடையச் செய்யும் என்பது நிச்சயமாகும். அதனால்தான் நபிகள் நாயகம் ஒற்றமை எனும்  கயிற்றை பற்றிப் பிடிக்குமாறு கூறியிருக்கிறார்கள். பொது பலசேனா போன்ற இனவாதிகள் சிறு குழுவினரே ஆவர்;. இந்த குழுவினர் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர். ஆயினும்  நாங்கள் அந்த குழுவினர் போன்று எதிர் நடவடிக்கை எடுக்க முடியாது. எமது சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூகத்தின் பலத்தை நிலை நாட்;ட வாக்கு பலத்தை பயன்படுத்த வேண்டும். சமூகத்தின் மீது அழுத்தம் மேற்கொள்ளபடும் போது அதனை முறியடிக்க வேண்டியது எல்லோருடையதும் கடமையும் பொறுப்புமாகும்.முஸ்லிம்களின் மீது எதிரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது கட்சி பேதம் மற்றும் வேறு பேதங்களை காட்டி பிரிந்து நிற்காமல் ஒன்றுபட வேண்டியது கட்டாயமாகும்.  தனித்து எமது கட்சியை மட்டும் சாடுவது தவறாகும். முஸ்லிம்களை அரசியல் ரீதியில் பலயீனப்படுத்தும் வேலைத்திட்டம் என்றோ ஆரம்பித்து விட்டது. கொழும்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறைந்து இருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.
உங்கள் கட்சி மேல் மாகாணத்தில் மொத்தமாக எத்தனை ஆசனங்களை பெறும் என கருதுகிறீர்கள்?
கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு ஆசனங்கள் வீதம் மொத்தமாக ஆறு ஆசனங்களை நாங்கள் பெறுவோம். இந்த தேர்தல் வெற்றியின் பின்னர் பேரம் பேசும் சக்தியாக எமது கட்சி இருக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயமாகும்.
Sunday, February 16, 2014 0 comments

கல்வி உளவியல்

கல்வி உளவியல்


கல்வி உளவியல் எனப்படுவது கல்வியூம் உளவியலும் இணைந்த ஒரு வார்த்தை மட்டுமள்ள அது ஒரு தனி அலகாக பரினமித்திருக்கின்ற ஒரு நவீன சந்தர்பபமாகும். கல்வி உளவியலின் மையப் புள்ளி மாணவரது நடத்தையாகும். இது குறித்து கருத்துக் கூறும் போது உளவியல் பாடத்தை வகுப்பறைக்கு பொருத்தமாக்கிக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளே கல்வி உளவியலாகும் என கல்வியியலாளர்கள் கருதுவதாகவூம் அதிகமானவர்கள் கல்வி உளவியல் என்பது தனக்கே உரிய கோட்பாடுகளையூம் பரிசோதனை நுற்பங்களையூம் பிரச்சினைகளையூம் தன்னகத்தே கொண்ட ஒரு துறையாகும் என்பதாக எனிடா வூல்பொல்க் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய கல்வி உளவியலினால் ஆசிரியர்கள் அதிகமான பயன்களைப் பெறுகின்றனர் உதாரணமாக

1. ஆசிரியர் தம்மைத் தாமே புரிந்து கொள்ளுதல்
2. மாணவரைப் புரிந்து கொள்ளுதல்
3. மாணவரது தனியால் வேறுபாட்டை அறிந்து கொள்ளுதல்
4. வகுப்பறை செயற்பாடுகளை சீர் செய்தல்
5. மாணவரது செயல்களை கட்டுப்படுத்துதல்
6. மாணவரை சிறந்த பொருத்தப்பாடடையச் செய்தல்
7. கற்றல் கற்பித்தலின் போது வரும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ளுதல் என பலவற்றைக் குறிப்பிடலாம்.
ஆரம்ப காலங்களில் கற்பித்தல் என்பது ஆசிரியரது பொறுப்பாக இருந்ததுடன் சம்பிரதாயங்கள் பாரம்பரிய விடயங்களுமே முக்கியம் பெற்றன. இன்று கல்வி உளவியலின் தாக்கம் அதிகமானதாலும் பாரம்பரிய முறைகள் தோழ்வியைத் தழுவியதனாலும் மனிதன் புதிய கோணங்களில் சிந்திக்க தலைப்பட்டான் அப்போது ஆசிரியன் தன்னை புரிந்த கொள்ள முற்பட்டான். அந்த புரிந்து கொள்ளலின் விளைவாக பிரதான 3 கோணங்களின் பார்வை விரந்தது
அ. கற்றல் நோக்கங்களை வரையறுத்தல்
ஆ. கற்றல் அனுபவங்களை ஒழுங்கமைக்கும் செயல்கள்
இ. கற்றல் விளைவூகளை மதிப்பிடும் செயல்கள்
ஏன மூன்றாக வகைப்படுத்தினர். இதனால் ஆசிரியர் ஆனவர் மாணவர்களை எத்தகைய நடத்தை எதிர்பார்ப்புக்களை அடைவதற்கு வழிநடாத்துவது என்ற அறிவினை அவர் பெறுகின்றார். அத்துடன் மாணவரது பல்வேறு துறைகளில் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு எத்தகைய மதிப்பீட்டு முறைகளை பயன்படுத்துவது? ஏன்ற விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியூம்.
அத்துடன் கற்பவரின் வயது மட்டம்இ வளர்ச்சிக் கட்டம்இ விN~ட பண்புகள் என்பன குறித்து ஆசிரியர் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள வழி ஏற்படுகின்றதுடன்  பல்வேறு உத்திகள்இ ஊக்கள்கல் போன்றவற்றையூம் அதனூடாக ஆசிரியர் - மாணவர் மற்றும் மாணவர் - மாணவர் தொடர்புகளை சீராக்கவூம் அவர் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டி ஏற்படுகின்றது. 
கற்பித்த விடயங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.  எதனை மதிப்பிட வேண்டும் எப்படி மதிப்பிட வேண்டும். அவ்வாறே பிரச்சினைகளை எதிரிகொள்ளும் மாணவர்களுக்கு தேவையான பின்னூட்டல்கள் வழங்கவேண்டி ஏற்படுகின்றது.  இந்த இடத்தில் ஆசிரியருக்கு கல்வி உளவியல் துணை புரிகின்றது.

உசாத்துணைகள்:

1.            யோ. பெனடிக் பாலன் - கல்வி உளவியலின அடிப்படைகள் - மதுறை - 1996
2.            மணியம் சிவகுமார் - அடிப்படை உளவியல் - சேமமடு – 2009
3.            முத்துலிங்கும் ச. - கல்வியூம் உளவியலும் - சேமமடு - 2010
4.            Anita E. Woolfolk - Education Psychology –Ohio USA+ 1993

0 comments

அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்டிக்கொண்டார்


தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்;டிக்கொண்ட போதிலும், தனித்துப் போட்டியிடும் முடிவை தாம் திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டதாக என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஞாயிற்றுக்கிழமை(26) கொழும்பு 15, ஹேனமுல்லை முகாம் பிரதேசத்தில் நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட  கூட்டத்தில் உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.

DSC_0522DSC_0535கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நைஸர்  ஆகியோரும் உரையாற்றினர். கொழும்பு மாநகர உறுப்பினர் அனஸூம் அதில் பங்குபற்றினார்.
அமைச்சர் ஹக்கீம் உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்ததாவது,
நான் கண்டி மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது பாரிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்த வேளையில் இந்த ஹேனமுல்லை கேம்ப் பிரதேசத்திலிருந்து வந்த இளைஞர்கள் என்னைச் சுற்றி ஓர் அரணாக நின்று உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினார்கள். அதனை நான் ஒருபோதும் மறக்க முடியாது.
முஸ்லிம் காங்கிரஸின் பலவீனம் என்பது இந்த அரசாங்கத்தின் அங்கமாக இருப்பது எனக் கூறுகின்றனர். இன்று முஸ்லிம்கள் மத்தியில் பிரதானமாக பேசு பொருளாக இருப்பது அரசாங்கத்தைப் பற்றிய விமர்சனம்தான். அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதை அதிருப்திக்குரிய விடயமாக ஒரு சாரார் நோக்குகின்றனர். அது அஜீரணமானதாகவும், ஜீரணித்துக்கொள்வதற்கு கஷ்டமானதாகவும் அநேகருக்கு தோன்றுகின்றது.
அதேவேளையில், முஸ்லிம் காங்கிரஸூக்குள்ள பலம் என்னைப்பொறுத்தவரை, அரசாங்கத்தினுள்ளேயே இருந்துகொண்டு முதுகெலும்புடன் தனித்துத் தேர்தலில் போட்டியிடுவதற்கான திராணியாகும்.  தேர்தல் வரும்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்துதான் போட்டியிட வேண்டுமென ஜனாதிபதி வேண்டிக் கொண்டாலும், தனித்துப் போட்டியிடும் முடிவை நான் திட்டவட்டமாக அவரிடம் கூறிவிட்டேன்.
நான் அரசாங்கத்தில் இருந்து கொண்டே அதனை பலவீனப்படுத்துவதாக நினைப்பவர்களும் இருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு எதிரான விடயங்கள் நான் உள்ளிருந்து கொண்டே போராடுவதால் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும் நான் மிகவும் சங்கடமாக இருக்கிறேன்.
மற்றவர்கள் பேசுவது போலெல்லாம் எனக்குப் பேச முடியாது. எனது பேச்சுக்கு ஒரு கனதியும், பக்குவமும் இருக்க வேண்டும். அதனையே சமூகமும் என்னிடமிருந்து எதிர்பார்க்கின்றது.  அமைச்சரவையில் நடப்பவற்றையெல்லாம் தெருவில் வந்து கதையளக்க முடியாது. அது நாகரிகமற்றது மட்டுமல்ல, கூட்டுப்பொறுப்பை மீறும் செயலுமாகும். சம்பிரதாயத்திற்கு விரோதமானதும் கூட.
எதிர்க்கட்சியினர்  ஊடகங்களில் தாமாகவே முன்வந்து தாறுமாறாக கருத்துகளை தெரிவிப்பார்கள். அவசியமானால் மட்டுமே நான் ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம்.  எந்த அமைச்சராவது இந்த அரசாங்கத்தை விட்டு வெளியில் வந்துள்ளனரா? நான் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற பின்னர் இந்த அரசாங்கத்திலிருந்து இரண்டு முறை வெளியேற நேர்ந்தது, ஒரு முறை அமைச்சுப் பொறுப்பிலிருந்து  தூக்கி வீசப்பட்டேன். அடுத்து நானாகவே வெளியே வந்தேன். இவ்வாறு அரசாங்கத்தை விட்டு தானாக வெளியே வந்த யாராவது அமைச்சர் ஒருவர் இருக்கின்றாரா?
அரசாங்கத்தை விட்டுவிட்டு வெளியில் இறங்கினால் ஓரிரு கிழமைகள் என்னை தூக்கி தோளில் சுமந்துகொண்டு செல்வார்கள். ஆனால், அப்படிச் செய்வதால் இன்றுள்ள நிலைமை தலைகீழாக மாறிவிடுமா? மறைந்த எமது தலைவர் கூறியதைப் போன்று சரியான முடிவை சரியான சந்தர்;ப்பத்தில் தான் எடுக்க வேண்டும். பிழையான சந்தர்ப்பத்தில் எடுக்கும் சரியான முடிவும் பிழையானதே. இதனை நான் முன்னரும் கூறியிருக்கின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் தனித்துப் போட்டியிட்டு விட்டு, அரசாங்கத்துக்கு முட்டு கொடுத்ததாக கூறினார்கள். ஆசாத் சாலி அதனை பெரிய பிரச்சினையாக்கி மந்திரம் மாதிரி உச்சரித்துக்கொண்டு போகிறார். அந்தத் தேர்தலில் தாமும் தெரியாமல் போய் எங்களுடன் போட்டியிட்டதாக கூறித்திரிந்தார். அவர் கெஞ்சப் போய் தான் நாங்கள் அவரை அப்பொழுது சேர்த்துக்கொண்டோம். நாங்களாக வலிந்து அவரை சேர்த்துக்கொள்ளவில்லை.
அந்தத் தேர்தலில் நாங்கள் சேர்ந்து ; போட்டியிட வேண்டுமென்று கட்சிக்குள் சதி நடந்தது. ஆனால், அன்றிருந்த சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்தில் தனித்துப் போட்டியிடுவது தான் எங்களுக்கு இருந்த சாணக்கியமான அணுகுமுறையாக தென்பட்டது.
முடிவுகளை கட்சியின் மீது திணிக்க முடியாது. மிகவும் சாதுரியமாக, மெதுவாக அதனை நகர்த்த வேண்டியிருந்தது.
அரசாங்கத்துடன் பேசி, எங்களுக்கு எத்தனை ஆசன ஒதுக்கீடுகள் தர முடியுமென கேட்டோம். அம்பாறை மாவட்டம்தான் எங்களது கட்சியின் கோட்டை. அவர்கள் தர விரும்பும் ஆசனங்களை மட்டும் எங்களால் பிச்சையாகப் பெற்றுக்கொள்ள முடியாது. எங்களுக்கு வேண்டிய எண்ணிக்கையிலான ஆசனங்களைத் தந்தால் சேர்ந்து கேட்பது பற்றி சீர்தூக்கி பார்க்கலாம் என்று அப்பொழுது கூறிவிட்டேன்.
அமைச்சர் அதாவுல்லாஹ், ரிஷாத் பதியுத்தீன், ஹிஸ்புல்லாஹ் போன்றோரை சமமாகப் பார்க்கின்ற பார்வையும், எங்களை பார்க்கும் பார்வையும் ஒன்றாக இருக்க முடியாது. அவர்களை வளர்த்து, போஷித்து எங்களுக்குக் குழி பறிக்க முடியாது. இது பலமான கட்சி. முஸ்லிம்களுக்கு ஒரு பலமான கட்சி இருக்க கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் இன்று எல்லா விடயங்களும் நடக்கின்றன.
நாங்கள் தனித்து போட்டியிடும் நிலையில், இப்பொழுது இன்னுமொரு அமைச்சரையும் எங்களைப் போன்றே தனித்துப் போட்டியிடுமாறு தள்ளிவிட்டிருக்கிறார்கள். அவர் முஸ்லிம் காங்கிரஸ் காரர்களைத் துரத்தித் திரிகின்றார்.
தேர்தல்களில் தொண்டமானும் தனித்து போட்டியிடுவதைக் காண்கிறோம்.
கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான எமது ஆதரவு அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தேவைப்பட்டது. கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைத்திருந்தால் எமது நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.
கிழக்கு முஸ்லிம் மக்கள் கூட இந்த விடயத்தில் எம்முடன் முரண்பட்டுக் கொண்டது எல்லோருக்கும் தெரியும். நாங்கள் கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து விடுவோமோ என்ற அச்சம் அரசாங்கத்திற்கும் இருந்தது. ஆனால், தற்கால அரசியல் சூழ்நிலையையும், யதார்த்தத்தையும் சீர்தூக்கிப் பார்த்து நாம் எமது முடிவை மேற்கொண்டோம்.
பதுங்கித்தான் பாய வேண்டும். தலைவர் (அமீர்) உடைய அந்தஸ்தில் உள்ளவர் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது. உலமா சபையில் முக்கியமானவர்கள் கூட எங்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினார்கள். நாங்கள் நிதானமாகச் சிந்தித்து தீர்மானத்தை எடுத்தோம்.
நாங்கள்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கில் ஆட்சியமைக்க ஒத்துழைத்திருந்தால், வடமாகாண சபை தேர்தலே நடந்திருக்காது. 13ஆவது திருத்தச் சட்டமும் இல்லாதொழிக்கப்பட்டிருக்கலாம்.  மாகாண சபை முறைமை ஒழிக்க வேண்டுமென அமைச்சரவையில் குறிப்பிடப்பட்ட பொழுது அதனை நான் வன்மையாக எதிர்த்திருக்கிறேன். இந்திய அரசாங்கத்தினால் பலவந்தமாக திணிக்கப்பட்டதுதான் 13ஆவது திருத்தச் சட்டம் என்று கூறப்பட்ட பொழுது, அதனை ஒழிக்கக் கூடாதென நான் வாதாடினேன்.
மாகாண சபை முறைமை வேறு மாகாணங்களைப் பொறுத்தவரை அதிக முக்கியமில்லாது விட்டாலும், வடகிழக்கிற்கு அது மிகவும் முக்கியமானது. அதனால் தான் சிறுபான்மையினர் அங்கு எமது அதிகாரங்களை ஓரளவாவது தக்க வைத்துக்கொண்டிருக்கின்றோம்.
அரசாங்கத்துடன் சேர்ந்து ஆறு தடவைகள் நான் புலிகளோடு பேசியிருக்கிறேன். எத்தனையோ நாடுகளுக்குப் போய் அவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். பிரபாகரனுடன் கூட நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்தினேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் மத்தியில் எவ்வளவு ஆதரவு இருந்தாலும், புலம்பெயர்ந்த தமிழர் சமூகம் நாட்டுக்கு வெளியில் இருந்துகொண்டு பாரிய சர்வதேச அழுத்தத்தை அரசாங்கத்திற்கு எதிராக கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களின் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதில் நாம் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும். அதை பக்குவமாக கையாளக் கூடிய சாணக்கியமற்ற கட்சியல்ல முஸ்லிம் காங்கிரஸ். அதேவேளையில் நாட்டின் பெரும்பான்மை சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளவும் நாம் முற்படக் கூடாது. ஆனால், இந்த முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளையும் நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது.
மிக தூரநோக்கோடு அதற்கான போராட்டத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். முன்யோசனையின்றி வெறுமனே வீதியில் இறங்கி கோஷம் எழுப்புவதால் மட்டும் எதுவும் ஆகப் போவதில்லை. எமது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை சரிவர தெரிந்து கொண்டுதான் ஒவ்வொரு விடயத்திலும் இறங்க வேண்டும்.
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரத்திலும் அங்குள்ளவர்கள் நேரடியாக கதைக்கப்போய் சிக்கலாகிப் போயுள்ளது. தெஹிவளை பிரதேசத்திலும் பள்ளிவாசலுக்கு பொலிஸார் போய் வெளியேறும்படி மீண்டும் தூண்டியிருக்கிறார்கள். அவ்வாறு வெளியேறிவிட வேண்டாம். தொழுகை நடத்திக்கொண்டிருங்கள் என்று கூறியுள்ளோம். வெளியேறினால் உரிமை பறிபோய்விடும். புளர்ஸ் வீதி, எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தை பள்ளிவாசல் விவகாரமும் இவ்வாறு தான்.
உண்மையில் இந்த விடயங்களில் சமூகம் ஒன்றுபட்டிருக்கிறது. அணுகுமுறைகளில் தான் வித்தியாசங்கள் உள்ளன.
ஆசாத் சாலி வெளியில் இருந்து கூச்சலிட்டுக்கொண்டிருப்பார். சிலர் அதைப் பார்த்து ஆஹா, ஓஹோ என்று பிரமிப்படைவார்கள். இவ்வாறு நடுச் சந்தியில் இருந்து வாய் கிழிய கத்துவதால் மட்டும் நாம் நமது இலக்கை அடைந்து விட முடியாது.
ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பலமான கட்சி என்ற காரணத்தினால் அரசாங்கத்திற்கு ஒருவித அச்சம் உள்ளது. தேர்தல் ஒன்று வரும்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் பலமாக இருக்கிறதா, அல்லது பலவீனமாக இருக்கிறதா எனப் பார்ப்பார்கள்.
இன்றுள்ள அரசியல் நிலைவரம் வேறுபட்டது. நாங்கள் நம்பிக்கையீனத்துடன் இருக்க முடியாது. கட்சியை இன்னும் இன்னும் பலவீனப்படுத்த இடமளிக்க முடியாது.  முன்னர் மேல்மாகாண சபையில் பாயிஸ் என்பவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அவரது தலைவராக இருந்த ஹாபிஸ் நஸீர் அஹமத் கட்சியில் எம்மோடு மீண்டும் இணைந்தபொழுது, அவரை அமைச்சராக்கி கிழக்கு மாகாண சபையை அலங்கரித்திருக்கிறோம்.
பாயிஸூக்கு ஓர் அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வேறு வேட்பாளர்கள் வென்றுவிடுவார்கள் என  அவர் சிந்தித்ததன் விளைவாக,  வேறு கட்சிக்காரர்களின் சதி வலையில் மாட்டி, ஒருவிதமான உற்சாகத்தில் திரிவதாக கேள்விப்படுகிறோம். அவர் ஒரு கட்சியின் உறுப்பினர் என்றால் அவர் அந்த கட்சிக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்தல் ஒன்று வரும்பொழுது சுயநலத்துக்காக கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது வழமையாக நடக்கின்ற விடயமாகும். குறிப்பாக இரண்டு பிரதான அரசியல் கட்சிகளிலும் ஆட்கள் அங்கும் இங்கும் மாறுவார்கள்.
கவர்ச்சியான முகங்களைத் தேடிப் போகின்றார்கள். நடிகைகளையும், பாடகிகளையும், அழகிகளையும் அரசியலில் இறக்க ஆசைப்படுகிறார்கள். தரமான, அனுபவமிக்கவர்கள் இருக்கத்தக்கதாக, இத்தகையானவர்கள் அரசியலில் ஈடுபடுத்த முற்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.
எங்கைளைப் பொறுத்தவரை முடிவுகள் மிக பக்குவமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.
Source: www.slmc.lk

0 comments

இமாம் பதியுஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி (Video mp3)

இமாம் பதியுஸ்ஸமான் ஸஈத் நூர்ஸி (Video mp3)



Saturday, February 8, 2014 0 comments

உயர் கல்வியைத் தொடர விரும்பும் வறிய மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு....தேசிய தொழில் சார் தகைமை (NVQ)

     எமது சமூகத்தில் பாடசாலைக்கல்வியைக்குப்பின் மாணவர்கள் பலர் பல வழிகளில் செல்கின்றனர். பல்கலைக்கழக வாய்ப்புக்கிடைத்தவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். மற்றவர்களில், சிலர் தொழில்களை நாடிச்செல்வர். சிலர் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பாடநெறிகளை கற்க செல்கின்றனர். ஒரு சிலர் மாத்திரம் அரச அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்லுாரிகளில் தமது மேற்படிப்பைத்தொடர்கின்றனர். முற்றிலும் இலவசமாக பாடநெறிகளை நடாத்தும் இத்தொழிநுட்ப கல்லுாரிகள்  நாடெங்கிலும் காணப்படுகின்றன. மாணவர்கள் அவரவரது பெறுபேறுகளுக்கு ஏற்ப அவர்களினால் விரும்பிய துறையினை தெரிவு செய்யலாம். 9ம் தரம் படித்த மாணவர்களுக்குக்கூட அரச அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்புவரை தமது கற்கையை தொடர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. NVQ (National Vocational Qualification) என்ற ஜப்பானிய முறைமை அடிப்படையில் பாடநெறிகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இத்தொழில்நுட்ப கற்கைகள் யாவும் இலவசமாக நடைபெறுவதோடு மாணவர்களுக்கு பஸ் மற்றும் புகையிரத சீசன் டிக்கட்கள் கழிவில் வழங்கப்படும். வறிய மாணவர்களுக்கு மாதாந்த உதவிப்பணம் வழங்கப்படும். ஒவ்வொரு கட்ட பயிற்சி முடிவி்ன் பின் மாணவர்கள் அரச தனியார் நிறுவனங்களில் 6 மாத கால தொழிற்பயிற்சிக்கு அமர்த்தப்படுவர். பயிற்சி முடிவில் சான்றிதழ் கிடைக்கும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொழில்நுட்பக்கல்லுாரி வீதம் 25 தொழில்நுட்பக்கல்லுாரிகள் காணப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் தாய்மடியாக கொழும்பு 10 மருதானை தொழிநுட்பவியல் கல்லுாரி காணப்படுகின்றது


பாரம்பரியமாக ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகள் தேசியரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பாடவிதானங் களைக் கற்பித்து, பரீட்சைகள் நடாத்தி க.பொ.த. (சாதாரண தரம்), க.பொ.த. (உயர்தரம்) சான்றதழ்களை வழங்குகின்றன. மேலும் பல்கலைக்கழக மான்ய ஆணைக்குழுவின் (UGC) மேற்பார்வையின் கீழ்வரும் வளாகங்கள் அவை எத்தகையதாக இருப்பினும், கலை மற்றும் விஞ்ஞானத் துறைகளில் கலைமாணிப் பட்டங்களை வழங்குகின்றன. எவ்வாறாயினும் அரச மற்றும் தனியார் தொழில்சார் பயிற்சி நிறுவனங் களினால் தரப்படும் சான்றிதழ்களும் டிப்ளோமாக்கள் அதுபோன்ற அந்தஸ்தைக் கொண்டிருப்பதில்லை. நிலைமை இவ்வாறிருப்பதால் தமது எதிர்காலத்துக்கான வாழ்க்கைத் தொழிற் பாதையை வளமாக அமைக்கும் நோக்கில் இளைஞர்கள் தரமான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தைத் தெரிவு செய்வது புதிராக உள்ளது. இதுபோன்றே ஆட்சேர்ப்பின்போதும் தமது கைத்தொழிற்துறை தேவைகளுக்கு இசைவாகும் விதத் தில் உள்ள எத்தகைய சான்றிதழை ஏற்பது என்பதைக் கவனத்தில் கொள்ளும்போது வேலை கொள் வோரும் சிரமமான இடத்திலேயே உள்ளனர்.

ஆகவே மூன்றாம்நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழு தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் வழிகாட்டலில் TEDP என்றவாறாக சகல அரச தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் செய்திறன் அபிவிருத்திச் செயற்றிட்டம் என்பவற்றுடன் ஒன்றிணைந்து 7 மட்டங்களைக் கொண்ட தேசிய தொழில்சார் தகைமை முறைமையொன்றை (NVQ) அறிமுகஞ் செயய நடவடிக்கை எடுத்துள்ளது. அநேகமான அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவித்தியடைந்துவரும் நாடுகள் NVQ முறைமை யின் ஐந்தாவது மட்டத்துக்கு ஒப்பான தொழில்சார்திறன் சான்றளிப்பு முறைமைகளை அறிமுகஞ் செய்துள்ளன. தற்போது அவ்வாறான முறைமையொன்று உண்மையாக அவ்வாறான நாடு களில் நடைமுறைமையிலுள்ளது. இத்தகைய நிலையில் NVQ சான்றிதழ் மட்டங்கள் தொடர்பான செய்திறன்கள் மீதான சர்வதேச விழிப்புணர்வு அறிவு மற்றும் செய்திறன்களைப் போலவே நடைமுறை யிலுள்ளன. க.பொ.த. (சாதாரண தரம்) மற்றும் க.பொ.த (உயர்தரம்) பொறுத்தளவில், தேசிய ரீதியாக வும் சர்வதேசி ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்ட சான்றளிப்பு முறையாகவும் உள்ள அதுவும் ஒன்றிணைக்கப் பட்டதொன்றாக உள்ளாக தேசிய தொழில்சார் தகைமை முறைமையைக் கொள்ளலாம்.



NVQ முறைமையை அமுல்படுத்தல்

  • NVQ முறைமையானது மூன்றாம் நிலை மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவின் (TVEC) நேரடி கண்காணிப்பின் கீழ் அமுல் செய்யப்படுகின்றது.
  • TVEC யினால் தேசிய திறன் தரங்களை விருத்தி செய்வதற்காகத் தொழில் இனங்காணப்பட்டதும் அவர்கள் NAITA வுக்கு அறிவிப்பர். இதனைத் தொடர்ந்து தேசிய திறன் தரங்களை வரைபைத் தயாரிப்பதற்காக கைத்தொழில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படுவதுடன் இதற்கென பொதுமக்களின் அபிப்பிராயமும் நாடப்படும்.
  • NAITAயின் கீழ் உள்ள தேசிய கைத்தொழில் பயிற்சி ஆலோசனைக் கமிட்டி, சம்பந்தப்பட்ட தேசிய திறன் தரங்களை செல்லுபடியாக்குவதுடன் குறிப்பிட்ட தொழிலுக்கான அதே தேசிய திறன் தரத்தை ஏற்றுக் கொள்ளும்.
  • NVQ சான்றிதழ்களை வழங்குவதற்கான கணிப்பீடு NITE-SL இனால் பயிற்றப்பட்டு NAITA வினால் பதிவு செய்யப்பட்ட அனுமதி பெற்ற கணிப்பீட்டாளரால் மேற்கொள்ளப்படும்.
  • ஒரு தேர்வுநாடி கணிப்பீட்டின் போது சித்தியடைந்து, தேர்ச்சியுடையவராகக் காணப்படின் சம்பந்தப்பட்ட NVQ சான்றிதழ் TVEC யின் பணிப்பாளர் நாயத்தினதும் பயிற்சி நிறுவனத்தின் அதிபரினதும் ஒப்பங்களைக் கொண்டதாக வழங்கப்படும்.
  • விருப்பமுடையோர்களுக்காக தேசிய திறன் தரங்கள் உசாவுதலுக்கென சகல வாழக்கைத் தொழில் வழிகாட்டல் நிலையங்களிலும் தொழில்சார் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அமைச்சின் கீழுள்ள கற்றல் வளப் பயன்பாட்டு நிலையங்களிலும் கிடைக்கக்கூடியதாக உள்ளன. சம்பந்தப்பட்ட NVQ மட்டங்களுக்காகத் தேவைப்படும் தேர்ச்சிகள் தேசிய திறன் தரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.



NVQ சான்றிதழ்களைப் பெறும் வழிகள்

NVQ சான்றிதழ்களைப் பெறுவதற்கான இருவழிகள் உள்ளன:

  1. திறன் தரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகள் தொடர்பாக தனது தேர்ச்சிகள் பற்றி போதுமானளவு சான்றுகளை ஒரு தேர்வு நாடி நிரூபிப்பாரோயாயின், RPL மூலமாக NVQ சான்றிதழைப்பெற அவர் தகுதியுடைய வராவார். இது முன் கற்றலை அங்கீகரித்தல் என்றழைக்கப் படுகின்றது.
  2. NVQ சான்றிதழைப் பெறுகின்ற இன்னுமொரு வழி, யினால் சான்றுப்படுத்தப்பட்ட தகைமையுடன் தொடர்புடைய தேர்ச்சி மட்ட பயிற்சிப் பாடநெறயைப் (CBT) பின்பற்றுவதாகும். தேர்ச்சிமட்ட தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபை, தொழில் பயிற்சி அதிகாரசபை, தேசிய இளைஞர் சேவை அதிகார சபை அல்லது தொழில்நுட்பக்கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் தொழில்நுட்பக் கல்லூரியிலாகும். NVQ சான்றிதழ்களை வழங்குவதற்காக சான்றுப்படுத்தப்பட்ட தனியார் மற்றும் NGO துறை நிறுவனங்களும் தமது பாடநெறிகளை நடாத்துகின்றன.



NVQ முறைமையின் அனுகூலங்கள்


NVQ சான்றிதழ்களை வைத்திருப்பவர்களுக்கான நன்மைகள்


  • NVQ சான்றிதழ் ஒரு பயிற்சிச் சான்றிதழல்ல. அது உங்கள் திறன்களை சான்றுபடுத்தும் சான்றிதழாகும். அது தேசிய ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழாகும். அதற்கான தொழிலில் சம்பந்தப்பட்ட NVQ மட்டத்திற்குரிய திறன்களை நீங்கள் கொண்டிருப்பதை அது உறுதி செய்யும்.
  • இக்கட்டமைப்பைல் உயர் மட்டங்களுக்கான தகைமையைப் பெறுவதற்கும் அனுபவமும் தேர்ச்சியும் அடிப்படையில் சம்பந்தப்பட்ட திறன்களைப் பெறுவதற்குமான வாழ்க்கைத் தொழில் வழியுமாகும்.
  • NVQமுறைமை ஒரு திறன் மதிப்பீட்டு முறைமையாக விருப்பத்துடன் வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்கான போக்கினைக் கூடுதலாகக் கொண்டது.
  • திறன் தரங்கள், கைத்தொழிலில் உள்ள வாண்மைத்துவ ரீதியாக தேர்ச்சி மிக்க நபர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளதால் அவ்வாறான திறன்சார் கைத்தொழிலில் மேற்கொள்ளப்படவேண்டிய தொழிற்பாடு களையும் கொண்டுள்ளன. ஆகவே NVQ சான்றிதழை வைத்திருப்போருக்கு தொழிலை நாடுவது மிகவும் இலகுவாகும்.
  • NVQ சான்றிதழைப் பெற்றிருப்போர் உயர்மட்ட தகைமை களைப் பெறுவதில் உற்சாகமுற்றிருப்பார்களாயின் தமது வாழ்க்கைத் தொழில் விருத்தியை மேம்படுத்துவதற்கு இந்த முறைமை ஊக்கமளிக்கிறது.


வேலை கொள்வோருக்கான அனுகூலங்கள்


  • கைத்தொழில்களுக்குத் தேவைப்படும் திறன்கள் இனங் காணப்பட்டிருப்பதாலும், NVQ முறைமையினால் சான்றுப்படுத்தப்பட்ட திறன்களை அவை கொண்டிருப்பதாலும் NVQ வைத்திருப்போரை தமது நிறுவனங்களில் வெலைக்கமர்த்துவது மிகச் சிறந்தது.
  • நிறுவனங்களுக்கான தொழில்நுட்பவியலாளர்களைச் சேர்த்துக்கொள்ள NVQ தகைமை பயன் படுவதுடன் பதவி உயர்வு, கூடிய சம்பளம் போன்றவற்றுக்கும் அது தகுதியுடைய தாகும்.

  
மட்டம்
அளிக்கப்படுவது
விபரம்
1
சான்றிதழ்
அடிப்படைத் திறன்களையும் நுழைவுத் தகுதி தேர்ச்சிகளையும் உடைய வினைஞருக்கானது
2
சான்றிதழ்
நேரடியானதும் வழமையானதுமான மேற்பார்வைத் தேவை உடைய வினைஞருக்கானது
3
சான்றிதழ்
சந்தர்ப்பத்துக்கேற்ற தேவை உடைய வினைஞருக்கானது
4
சான்றிதழ்
சுயாதீனமாக வேலை செய்யக் கூடிய வினைஞருக்கானது
5
டிப்ளோமா
மேற்பார்வையாளருககானது
6
டிப்ளோமா
முகாமையாளருககானது
7
Dபட்டாதாரிப் பட்டம்
தீர்மானம் மேற்கொள்பவருக்கானது

தொடர்புகளுக்கு 
மருதானை தொழில்நுட்பக்கல்லுாரி
Maradana College of Technology
எம்மைப் பற்றி
தொடர்பு விபரங்கள்
நிறுவனப்படுதல் : 1893
மாகாணம் : Western
மாவட்டம் : Colombo
வட்டார இல : 01
இடம் : Olcott Mawatha,Colombo 10.
Principal
College of Technology, P.O.Box:557 Olcotte Mawatha, Colombo 10.
011-2421580(Tel)
011-2324117(Fax)
 ஏனைய தொழிநுட்பக்கல்லுாரிகள் பற்றி அறிய www.techedu.gov.lk எனும் இணைய முகவரியை பயன்படுத்தலாம்.





 
;