|
எமது சமூகத்தில் பாடசாலைக்கல்வியைக்குப்பின்
மாணவர்கள் பலர் பல வழிகளில் செல்கின்றனர்.
பல்கலைக்கழக வாய்ப்புக்கிடைத்தவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். மற்றவர்களில், சிலர்
தொழில்களை நாடிச்செல்வர். சிலர் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் பாடநெறிகளை கற்க செல்கின்றனர்.
ஒரு சிலர் மாத்திரம் அரச
அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப கல்லுாரிகளில் தமது மேற்படிப்பைத்தொடர்கின்றனர். முற்றிலும் இலவசமாக பாடநெறிகளை நடாத்தும்
இத்தொழிநுட்ப கல்லுாரிகள்
நாடெங்கிலும்
காணப்படுகின்றன. மாணவர்கள் அவரவரது பெறுபேறுகளுக்கு ஏற்ப அவர்களினால் விரும்பிய துறையினை தெரிவு
செய்யலாம். 9ம் தரம் படித்த மாணவர்களுக்குக்கூட அரச அங்கீகாரம் பெற்ற
பட்டப்படிப்புவரை தமது கற்கையை தொடர வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. NVQ (National Vocational Qualification) என்ற ஜப்பானிய முறைமை அடிப்படையில்
பாடநெறிகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இத்தொழில்நுட்ப கற்கைகள் யாவும் இலவசமாக
நடைபெறுவதோடு மாணவர்களுக்கு பஸ் மற்றும் புகையிரத சீசன் டிக்கட்கள் கழிவில்
வழங்கப்படும். வறிய மாணவர்களுக்கு
மாதாந்த உதவிப்பணம் வழங்கப்படும். ஒவ்வொரு கட்ட பயிற்சி முடிவி்ன் பின் மாணவர்கள் அரச தனியார் நிறுவனங்களில்
6 மாத கால தொழிற்பயிற்சிக்கு அமர்த்தப்படுவர். பயிற்சி
முடிவில் சான்றிதழ் கிடைக்கும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொழில்நுட்பக்கல்லுாரி வீதம் 25 தொழில்நுட்பக்கல்லுாரிகள்
காணப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் தாய்மடியாக கொழும்பு 10 மருதானை
தொழிநுட்பவியல் கல்லுாரி காணப்படுகின்றது
|
|||||||||||||||||||||||||||||||||
|
பாரம்பரியமாக ஆரம்ப
இடைநிலைப் பாடசாலைகள் தேசியரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பாடவிதானங் களைக் கற்பித்து, பரீட்சைகள் நடாத்தி
க.பொ.த. (சாதாரண தரம்), க.பொ.த. (உயர்தரம்)
சான்றதழ்களை வழங்குகின்றன. மேலும் பல்கலைக்கழக மான்ய
ஆணைக்குழுவின் (UGC) மேற்பார்வையின் கீழ்வரும் வளாகங்கள் அவை
எத்தகையதாக இருப்பினும், கலை மற்றும் விஞ்ஞானத்
துறைகளில் கலைமாணிப் பட்டங்களை வழங்குகின்றன.
எவ்வாறாயினும் அரச மற்றும் தனியார் தொழில்சார் பயிற்சி
நிறுவனங் களினால் தரப்படும் சான்றிதழ்களும்
டிப்ளோமாக்கள் அதுபோன்ற அந்தஸ்தைக் கொண்டிருப்பதில்லை. நிலைமை
இவ்வாறிருப்பதால் தமது எதிர்காலத்துக்கான
வாழ்க்கைத் தொழிற் பாதையை வளமாக அமைக்கும் நோக்கில்
இளைஞர்கள் தரமான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தைத் தெரிவு
செய்வது புதிராக உள்ளது. இதுபோன்றே ஆட்சேர்ப்பின்போதும் தமது
கைத்தொழிற்துறை தேவைகளுக்கு இசைவாகும் விதத் தில் உள்ள
எத்தகைய சான்றிதழை ஏற்பது என்பதைக் கவனத்தில்
கொள்ளும்போது வேலை கொள் வோரும் சிரமமான இடத்திலேயே உள்ளனர்.
|
|||||||||||||||||||||||||||||||||
|
ஆகவே மூன்றாம்நிலை மற்றும் தொழில்சார் கல்வி
ஆணைக்குழு தொழில்சார் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின்
வழிகாட்டலில் TEDP என்றவாறாக சகல அரச தொழில்நுட்பக் கல்வி
மற்றும் தொழில்சார் பயிற்சி நிறுவனங்கள் மற்றும்
செய்திறன் அபிவிருத்திச் செயற்றிட்டம் என்பவற்றுடன் ஒன்றிணைந்து 7 மட்டங்களைக் கொண்ட தேசிய தொழில்சார் தகைமை
முறைமையொன்றை (NVQ) அறிமுகஞ் செயய நடவடிக்கை எடுத்துள்ளது.
அநேகமான அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிஶத்தியடைந்துவரும் நாடுகள் NVQ முறைமை யின் ஐந்தாவது மட்டத்துக்கு ஒப்பான
தொழில்சார்திறன் சான்றளிப்பு முறைமைகளை அறிமுகஞ் செய்துள்ளன.
தற்போது அவ்வாறான முறைமையொன்று உண்மையாக அவ்வாறான நாடு களில்
நடைமுறைமையிலுள்ளது. இத்தகைய நிலையில் NVQ சான்றிதழ் மட்டங்கள்
தொடர்பான செய்திறன்கள் மீதான சர்வதேச
விழிப்புணர்வு அறிவு மற்றும் செய்திறன்களைப் போலவே நடைமுறை யிலுள்ளன.
க.பொ.த. (சாதாரண தரம்) மற்றும் க.பொ.த (உயர்தரம்)
பொறுத்தளவில், தேசிய ரீதியாக வும் சர்வதேசி ரீதியாகவும்
அங்கீகரிக்கப்பட்ட சான்றளிப்பு முறையாகவும் உள்ள அதுவும்
ஒன்றிணைக்கப் பட்டதொன்றாக உள்ளாக தேசிய தொழில்சார்
தகைமை முறைமையைக் கொள்ளலாம்.
|
|||||||||||||||||||||||||||||||||
|
NVQ முறைமையை அமுல்படுத்தல்
|
|||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||
|
NVQ சான்றிதழ்களைப் பெறும் வழிகள்
|
|||||||||||||||||||||||||||||||||
|
NVQ சான்றிதழ்களைப் பெறுவதற்கான இருவழிகள்
உள்ளன:
|
|||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||
|
NVQ முறைமையின் அனுகூலங்கள்
|
|||||||||||||||||||||||||||||||||
|
NVQ சான்றிதழ்களை வைத்திருப்பவர்களுக்கான
நன்மைகள்
|
|||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||
|
வேலை கொள்வோருக்கான அனுகூலங்கள்
|
|||||||||||||||||||||||||||||||||
தொடர்புகளுக்கு
மருதானை
தொழில்நுட்பக்கல்லுாரி
ஏனைய
தொழிநுட்பக்கல்லுாரிகள் பற்றி அறிய www.techedu.gov.lk
எனும் இணைய முகவரியை பயன்படுத்தலாம்.
Source : http://www.tvec.gov.lk
|
|||||||||||||||||||||||||||||||||
Saturday, February 8, 2014
உயர் கல்வியைத் தொடர விரும்பும் வறிய மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு....தேசிய தொழில் சார் தகைமை (NVQ)
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment