Tuesday, March 11, 2014 0 comments

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மற்றும் சோம ஹிமிக்கும் இடையிலான பிரசித்திபெற்ற விவாதத்தின் ஒரு பகுதி

தொடர் - 01






0 comments

கம்பஹா மாவட்ட முஸ்லீம்களின் வாக்குப்பலம்


0 comments

மத்தியில் இருந்து வெளியேறும் போது மாகாண ஆட்சியிலும் தொடர்பை துண்டித்துக் கொள்ள நேரிடும்


hakeemMSN:அரசாங்கத்தில் இருந்து நீங்குவதானால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்திற்கு வழங்கி வரும் ஆதரவையும் விலக்கிக் கொள்ள நேரிடும். வட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் தோல்வி அடைந்துள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தையும் பறிகொடுத்தால் நிலைமை என்னவாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பினார்.
மேல் மாகாண சபை தேர்தலில், கம்பஹா மாவட்டத்தில், வத்தளை பிரதேசத்தில் வேலேயகொட பிரதேசத்தில் ஞாயிற்றுகிழமை (09) இரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.  அமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்தவையாவன,
அரசாங்கத்தை விட்டு வெளியேற்றப்படும் சந்தர்ப்பத்தில், கிழக்கு மாகாண சபை ஆட்சியிலும் நாங்கள் நிலைத்திருக்க முடியாது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அங்கு அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை நாங்கள் விலக்கிக் கொள்ள நேரிடும். அவ்வாறானால் அங்கு ஆட்சியமைக்க முன்வருமாறு கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மாகாண ஆளுநர் கோருவார், அவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை கூட்டமைப்பினர்; கோரக்கூடும். அவ்வாறன்றி, பலத்தை நிரூபிக்க முடியாத பட்சத்தில் மாகாண சபையை ஆளுநர் கலைத்து விடலாம். அவ்வாறானால், நிலைமை என்னவாகும்? மீண்டும் தேர்தல் நடாத்த வேண்டி வரும்.
வட மாகாண சபை தேர்தலிலும் தோல்வியடைந்து, கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சியைப் பறிகொடுத்தால் அரசாங்கத்தின் நிலைமை என்ன? அவ்வாறான நிலைமையில் முடியுமானால் மாகாண சபையை கலைத்து விட்டு, தேர்தல் நடத்தி வெற்றி பெற்றுக் காட்டட்டும். முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பலம் எத்தகையது என அரசாங்கத்தில் இருக்கும் இனவாதக் கட்சிகளுக்குத் தெரிவதில்லை. அரசாங்கத்தை விட்டு வெளியேறினாலும், அரசியல் நடத்தும் வல்லமை இறைவன் அருளால் முஸ்லிம் காங்கிரஸிக்கு இருக்கிறது. அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும், நாங்கள் அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக இருப்போம். அதனை அனைவரும் நன்றாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
பிரேமதாசவை ஜனாதிபதி ஆக்கியவர்கள் நாங்கள். சந்திரிக்காவை ஜனாதிபதி ஆக்கியவர்களும் நாங்கள் தான். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதி ஆவதானாலும் அதனை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டியவர்களாக இருப்போம். இனவாத, தீவிரவாதக் கும்பல்கள் கூச்சல் இடுகின்றன என்பதால் நாங்கள் அரசாங்கத்தை விட்டு வலிந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை. வேண்டுமானால், அரசாங்கம் எங்களை வெளியேற்றட்டும். மத்திய அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் போது மாகாண சபைகளின் ஆட்சியிலும் தொடர்பை துண்டித்துக் கொள்ள நேரிடும். அதன் விளைவு என்னவாகும் என்பதை ஜனாதிபதியும், அரசாங்கமும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்கு எத்தனையோ சக்திகள் எத்தனித்துக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தை விட்டு எங்களை வெளியேற்றிவிட வேண்டும் என்பதற்காக அதிலுள்ள தீவிரவாத சக்திகள் எங்களை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். அரசாங்கத்தை விட்டு நாங்களாகவே வெளியேறி விட வேண்டுமென எதிர்பார்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் என்றால் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றது.
நாங்கள் மிகவும் நாணயமாகவும், பக்குவமாவவும், நேர்மையாகவும் அந்த விமர்சனங்களை எதிர் கொண்டு வருகின்றோம். இந்த நாடு முழுவதிலும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் தனக்குரிய தார்மீக பொறுப்பை தவறவிடாமல், முஸ்லிம்களைப் பற்றிய சரியான தகவல்களை அவை சென்றடைய வேண்டிய இடத்திற்கு சேர்ப்பிக்க வேண்டிய பாரிய பொறுப்பு இக்கட்சிக்கு இருக்கின்றது. சர்வதேச ரீதியான விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை ஜெனீவாவில் கொண்டு வரப்படும் சூழ்நிலையில் இந்த நாட்டை தலைகுனிய வைக்க வேண்டும் என்ற நோக்கம் முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கும் உடந்தையாக செயல்பட வில்லை.
ஆனால், நாட்டில் சட்டமும், ஒழுங்கும் நிலை நாட்டப்பட வேண்டும். இந்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்க வேண்டும். என்ற காரணத்தினால் ஒரு சில விடயங்கள் பற்றியவற்றை எங்களது பார்வையில் கூறவேண்டிய கடமை இந்தக் கட்சிக்கு இருக்கின்றது. அதை சகித்துக் கொள்ள முடியாமல் சிலர் எங்களை தாறுமாறாக பேசுகிறார்கள். அரசாங்கத்திற்கு உள்ளே இருக்கின்ற தீவிரவாதக் கட்சிகள் இந்த நாட்டு முஸ்லிம்களை வந்தான் வரத்தான்களாகவும், ஒட்டுண்ணிகளாகவும், சுரண்டிப் பிழைக்கின்றவர்களாகவும் பார்க்கின்ற கேவலமான நிலையில் அவர்களை அரசாங்கம் அரவணைத்துக் கொண்டிருந்தாலும் அதனை நாங்கள் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. தாங்கள் தான் அரசாங்கத்திற்கு பலம் சேர்க்கிறோம் என அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கலாம். ஆனால், அந்த தீவிரவாத சக்திகள் காரணமாக அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களும், சிறுபான்மைச் சமூகங்களும் கொண்டிருந்த நம்பிக்கை படிப்படியாக இழக்கப்படுகிறது. அரசாங்கத்தின் பலவீனமாக அந்த தீவிரவாத சக்திகளேயே நாங்கள் பார்க்கின்றோம்.
எனவே. அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதில் முக்கிய இடத்தை வகிப்பவர்கள் அந்த தீவிரவாத சக்திகள் தாம் என்பதை அரசாங்கம் இன்னும் உணராமல் இருக்கிறது. ஜனாதிபதி மிகவும் அனுபவம் வாய்ந்த பழுத்த அரசில்வாதி. இந்த தீவிரவாத சக்திகளின் போக்கு தமது அரசாங்கத்தின் பலம் என அவர் எண்ணிக் கொண்டிருப்பானால், அதைவிட பெரிய அரசியல் மடைமை வேறேதுவும் இருக்க முடியாது. அவர் இந்த தீவிரவாத சக்திகளின் பணயக் கைதிகளாக மாறிவிடக் கூடாது என்பதற்கான எச்சரிக்கையையும், அபாய அறிவிப்பையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செய்ய வேண்டிய அவசியம் நாட்டின் நலன்கருதி மிகவும் நேர்மையாக சிந்திக்கும் எங்களுக்கு இருக்கின்றது. அவர்கள் வாய்க்கு வந்தவாறு முஸ்லிம் காங்கிரஸை திட்டித் தீர்ப்பது போல எங்களால் கீழ்தரமாக நடந்து கொள்ள முடியாது.
நேர்மையாகவும், பக்குவமாகவும் சில வேளைகளில் மௌனமாகவும் அவர்களது அசிங்கமான விமர்சனங்களை நாங்கள் பொறுமையோடு எதிர்கொள்கின்றோம். அவர்கள் வலிந்து வம்புக்கு இழுக்கின்ற பொழுது நாங்கள் வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு போக முடியாது. அது எங்களது பார்வையில் அரசியல் முதிர்ச்சியான விடயமல்ல.
இன்று இந்த நாட்டின்; நீதியமைச்சராக இருக்கின்ற நான், வாய் திறந்தால் அதனால் ஏற்படும் தாக்கம் சாதாரணமானதல்ல. இப்பொழுது முஸ்லிம் காங்கிரஸை ஹெல உறுமய போன்றவை எவ்வாறு விமர்சிக்கின்றனவோ அவ்வாறு முஸ்லிம் காங்கிரஸையும் அரசாங்கத்தையும் விமர்சிப்பவர்தான் ஆஸாத்சாலி. அரசாங்கத்தை கூடுதலாக விமர்சிக்கப் போய் அவர் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்த விதம் தவறானது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நான் பாதுகாப்புச் செயலாளருடன் வாதிட்டேன். அவரது பலம், பலவீனம் எப்படியாக இருந்தாலும் அரசாங்கத்தை அவர் விமர்சிக்கின்றார் என்பதற்காக பிழையாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவரை கைது செய்ய முடியாது என்ற மிகவும் திட்டவட்டமான நிலைப்பாட்டில் நான் இருந்தேன். சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்று கூறப்படும் இந்த நாட்டில் ஆஸாத்சாலியின் கைதை நீதியமைச்சராக இருக்கின்ற நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்றேன். அதன் பயனாக நான் அதனை சுட்டிக்காட்டிய மறுநாளே அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.  ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பரிதாபகரமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவர்கள் மத்தியில் அரவே ஒற்றுமை இல்லை. தலைமைத்துவப் பிரச்சினை காரணமாகவும், உட்பூசல் காரணமாகவும் அந்தக் கட்சி பலமிழந்து நிற்கிறது. அவர்களால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்றார்.
நன்றி: http://lankamuslim.org/
0 comments

இலங்கையில் பௌத்த தீவிரவாதம் தொடர்பில் வளைகுடா ஆங்கில எழுத்தாளர் ஒருவரின் பார்வையில் !



1Gulf News  Tariq A. Al Maeena: மொழியாக்கம்: நித்தியபாரதி:- 
தமிழ்ப் புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009ல் வெற்றிகொள்ளப்பட்ட போது சிறிலங்காவானது பலம்பெற்ற, ஒற்றுமையான ஒரு நாடாக விளங்கும் என்ற நம்பிக்கை துளிர்த்திருந்தது. மூன்று பத்தாண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தின் வடுக்கள் சிறிலங்கா என்கின்ற தேசத்தை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதித்தது. யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டது தொடர்பில் இதற்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.
தமிழ்ப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக சிறிலங்காவைச் சேர்ந்த 150,000ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த யுத்தத்தின் விளைவாக 80,000 – 100,000 வரையான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டன. சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்த நாட்களில் மட்டும் 40,000 வரையான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.
இவ்வாறான ஆழமான வடுக்கள் காணப்படுகின்ற அதேவேளையில், சிறிலங்காவில் வாழும் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கும் இடையில் மீளிணக்கப்பாட்டை கொண்டுவருவதற்கான ஆரம்ப முயற்சிகளில் இந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டது.
ஆனால் இவ்வாறான மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சூழல் சிறிலங்காவில் காணப்படவில்லை என்பதை யுத்தத்தின் பின்னரான நிகழ்வுகள் சில எடுத்துக்காட்டின. சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்தும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பௌத்த சிங்கள சமூகத்தால் முஸ்லீம் மக்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்படுகின்றனர். அத்துடன் முஸ்லீம் மக்கள் மீது பௌத்த சிங்களவர்கள் மேற்கொள்ளும் சில தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
சிறிலங்காவின் ஆழமான பொருளாதார மற்றும் சமூக மோதலை உருவாக்குவதற்காக சிறிலங்காவின் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ராஜபக்ச அரசாங்கம் துணைபோவதாக சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறான பௌத்த சிங்கள ஆதிக்கசக்திகளால் சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் நாட்டில் சமாதானம் மற்றும் இனஒற்றுமை போன்றவற்றை நிலைநிறுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா முழுவதிலும் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதில் Bodu Bala Sena என்கின்ற பௌத்த ஆதிக்க சக்தி முதன்மை இடத்தை வகிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்கள் பௌத்த மதத்திற்கும் பௌத்தர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய என்கின்ற அரசியற் கட்சியுடன் இணைந்து செயற்படும் Bodu Bala Sena என்கின்ற இப்பயங்கரவாதக் குழு அறிவித்துள்ளது. “எல்லா வாய்ப்புக்களையும் பயன்படுத்தி சிறிலங்காவில் பௌத்த மதத்தையும் அதன் மரபுகளையும் பலப்படுத்துவதுடன், இதனைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக” இந்த அமைப்பு அறிவித்துள்ளது.
முஸ்லீம் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைக்கு உட்படுவதை உறுதிப்படுத்துவதே இந்த அமைப்பின் தெளிவான நோக்காகக் காணப்படுகிறது. எதுஎவ்வாறிருப்பினும், சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 10 சதவீதத்தை அதாவது இரண்டு மில்லியன்களாக காணப்படும் முஸ்லீம்கள் கடந்த பல பத்தாண்டுகளாக தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவது என்கின்ற உண்மையை இவர்கள் மறந்துவிடக் கூடாது.
சிறிலங்காவின் முஸ்லீம் மக்கள் நாட்டின் இராணுவம், காவற்துறை போன்ற துறைகளில் மிக அரிதாகவே இணைக்கப்படும் அதேவேளையில், சிறிலங்கா அரச திணைக்களங்களிலும் ஏனைய அரச நிறுவகங்களிலும் பதவிகளில் அமர்த்தப்படுவதும் குறைவாகவே காணப்படுகின்றது. இவர்கள் இவ்வாறான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதில் சமசந்தர்ப்பத்தை இழக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதேபோன்று சிறிலங்காவின் வர்த்தக மற்றும் வியாபாரத் துறைகள் உள்ளடங்கலான முதன்மையான பொருளாதார நடவடிக்கைகளில் முஸ்லீம் சமூகம் ஓரங்கட்டப்படுகின்றனர்.
சிறிலங்காவின் வடக்கில் யுத்தத்தில் பங்கெடுத்த இரு தரப்பினரதும் தாக்குதலுக்கு உட்பட்டு 130,000 வரையான முஸ்லீம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இன்று யுத்தம் முடிந்து மூன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட யுத்தத்தால் இடம்பெயர்ந்த முஸ்லீம்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் இடம்பெயர்ந்தோர் முகாங்களில் வாழ்கின்றனர். முஸ்லீம் மக்களின் பிரச்சினைகளை முக்கியப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எந்தவொரு முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
இதேவேளையில், மத்திய மாகாணத்திலுள்ள கண்டியிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிறிய நகரான புவெலிகட என்கின்ற இடத்தில் வாழும் முஸ்லீம் மக்கள் மீது அண்மையில் Bodu Bala Sena அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறைகளை மேற்கொண்டுள்ளனர். இங்குள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் சிறிய கடைகளைக் கொண்டுள்ளனர்.
“பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சிங்கள இளைஞர் குழு ஒன்று முஸ்லீம்கள் சிலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதாவது வான் ஒன்று வீதிக்கு தடையாக நிறுத்தப்பட்டதாக கூறியே இந்தச் சண்டை ஆரம்பித்தது. இந்த வன்முறைச் சம்பவத்தில் சில முஸ்லீம்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சிறிலங்கா அரசாங்கத்தின் சிறப்பு காவற்துறை அதிரடிப் பிரிவு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை” என இந்தச் சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சாட்சியக்காரர் ஒருவர் தெரிவித்தார்.
“சிங்கள மற்றும் ஆங்கில மொழி மூல பத்தொன்பது இணையத்தளங்களின் ஊடாக இஸ்லாம் மற்றும் முஸ்லீம் தொடர்பாக அவதூறு பரப்பப்பட்டுள்ளது. இதனை மிகச் சிறிய ஆனால் நன்றாக திட்டமிட்டு நிர்வகிக்கப்படும் சிங்கள குழு ஒன்றே மேற்கொண்டுள்ளது” என முஸ்லீம்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அனுராதபுரத்தில் 400 ஆண்டு காலப் பழமை வாய்ந்த முஸ்லீம் புனித தலம் ஒன்று அண்மையில் அழிக்கப்பட்டமை மற்றும் இதனைத் தொடர்ந்து தம்புள்ள புனித பள்ளிவாசல் மீது இப்பகுதியில் பொறுப்பாகவுள்ள புத்த பிக்குவின் தலைமையில் பௌத்த காடையர்கள் தாக்குதல் மேற்கொண்டமை போன்றவற்றை முஸ்லீம்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சில பள்ளிவாசல்கள் மீதும் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லீம்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இதுவரை இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த விடயத்தில் தொடர்புபட்ட அதிகாரிகள் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர்.
நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்களை அழித்து நாட்டை கொலைக்களங்களாக மாற்றும் சில பௌத்த சிங்கள பயங்கரவாதிகள் தொடர்ந்தும் தண்டிக்கப்படாது தட்டிக்கொடுக்கப்பட்டால், நாட்டில் மீண்டும் பிறிதொரு நீண்ட கால உள்நாட்டு யுத்தம் ஒன்று ஆரம்பமாகும்.
சிறுபான்மையினருக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் இவ்வாறான வன்முறைகள் மற்றும் பயங்கரவாத, அடக்குமுறைகளை இந்த உலகமானது தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்பதற்கு சிறிலங்கா மட்டும் விதிவிலக்கல்ல. தனது சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை வழங்கத் தவறியதற்கான தண்டனையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து சிறிலங்கா தப்பிக்க முடியாது.
- தகவல் Gulf News ஊடகத்தின் சிறப்பு செய்தியாளர் Tariq A. Al Maeena / மொழியாக்கம்: நித்தியபாரதி.- புதிப்பலகை
நன்றி: http://lankamuslim.org/
Sunday, March 9, 2014 0 comments

தடைதாண்டி முன்னேறு

தடைதாண்டி முன்னேறு


ஒரு ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாக இருந்தது. இதனால் அவன் பல வழிகளிலும் சாதித்து வந்தான். அவனது ஆவலும் தீராத வெற்றிப்பசியும் அவனுக்கு மேலும் வழிகளைத் திறந்துவிட்டது. 

ஆனாலும் அவனிடம் ஒரு குறை இருந்தது. அவன் எச்செயலில் இறங்கினாலும் யாராவது அவனை கிண்டல் செய்தால் அல்லது குறை சொன்னால் அவன் இடையில் அச்செயலை கைவிடுவான். இது அவனி்ன் முன்னேற்றத்துக்கு பெரும் தடையாக தோன்றியது. 

ஒரு முறை அவனது ஊருக்கு ஒரு பெரியார் வந்திருந்தார். இவன் அப்பெரியாரைச்சந்தித்தான். தன்னை அறிமுகம் செய்து தனது பிரச்சினைகளை எடுத்துக்கூறினான். அப்பெரியார் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சிறிது நேரம் சிந்தித்தார். பிறகு ஒரு கேள்வி கேட்டார். "நீ எருமையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது கழுதையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது குதிரையாக இருக்க விரும்புகிறாயா?" இளைஞனுக்கு தூக்கிவாரிப்போட்டது. 

"நீங்கள் என்னை கிண்டல் செய்கிறீர்களா?" என்று கேட்டான். அப்பெரியார் சிரித்தார். பிறகு கூறினார். "மகனே! எருமையானது எவரும் பின்னால் சென்று அதை தொந்தரவு செய்தால் அல்லது அடித்தால் என்ன செய்யும்? அதன் பாட்டில் இருக்கும். கழுதையானது அப்படி அடித்தவனை பின்னங்காலால் எட்டி உதைக்கும். ஆனால் குதிரையோ யாராவது அடித்தால் வீர முழக்கத்துடன் வேகமாக முன்னோக்கிப்பாய்ந்து செல்லும். இவற்றில் நீ எதை விரும்புகிறாய்?"

இப்போதுதான் இளைஞனுக்கு எல்லாம் புரிந்தது. "நான் எருமைபோல் ஒன்றும் விளங்காது வெறுமனே இருக்க விரும்பவில்லை. கழுதைபோல் மற்றவர்களை திருப்பி கிண்டல் செய்யவோ ஏசி நாட்களை வீணாக்கவோ விரும்பவில்லை. மற்றவரது கேலிகளையும் அவமானப்படுத்தல்களையும் எனக்கு கிடைத்த உத்வேகமாக பயன்படுத்தி குதிரைபோன்று வீர நடையுடன் என்றும் வெற்றியின் பாதையில் செல்வேன். இறைவன் உங்களுக்கு நற்நகூலி தருவானாக." என்று சொல்லி பெரியவர்க்கு நன்றி கூறி விடைபெற்றான்.

நன்றி: விடிவெள்ளிப்பத்திரிகையில் வெளியான ஒரு கதையின் தழுவல்.
0 comments

வெற்றிக்கு வழி

வெற்றிக்கு வழி


நாம் எதிலும் வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் காணப்படவேண்டியது மன ஒருமையாகும். அதற்கு நம்மிடம் அவ்விடயத்தில் ஆர்வம் இருக்கவேண்டும். சகல விடயங்களும் நமக்குப்பிடித்தவையாக இருப்பதில்லை. ஆனாலும் செய்துதான் ஆக வேண்டும். தீர்வு என்ன? பிடிக்காததையும் பிடித்தவைகளாக மாற்றிக்கொள்வதுதான்.

 பாடசாலை மாணவர்களைப்பாருங்கள்! அவர்களில் பலருக்கு படிப்பில் தான் தங்களின் கவனத்தைக் குவிக்க முடிவதில்லை. அதற்கு காரணம் என்ன? அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி முறைமை அவர்களுக்கு விருப்பமானதாய் இல்லாதிருப்பதுதான். அதில் கவனம் செலுத்த முடியாத மாணவர்கள் விளையாட்டு என்றால் தங்களையே மறந்து விடுவர். அவர்களின் மனம் முழுவதும் விளையாட்டை ஆக்கிரமித்து விடுகிறது. உடல் உறுப்புக்களும் தசை நார்களும் முறுக்கேறி விடுகின்றன. விளையாட்டுடன் அவர்கள் அப்படியே ஒன்றித்து விடுகிறார்கள்.

படிப்பில் கவனம் குவிவதில்லை. விளையாட்டில் கவனம் குவிகிறது. அவர்களுக்கு கல்வி பயிற்ற சிறந்த வழி எதுவெனில் அவர்களுக்குப் பிடித்தமானதை பயிற்றுவதும் பயிற்றப்படும் விடயத்தில் அவர்களை விருப்பங்கொள்ளச்செய்வதும் தான். இம் முறையே ரசியா போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு மக்களை மேன்மக்களாக்குகின்றனர்.

சிறுவனின் விருப்பம் எதில் உள்ளது என்பதைக் கண்டு கொண்டு அதுக்கேற்ற கல்வியை வழங்குகின்றனர். எனவேதான் கோள்களில் கூட கால் வைக்கும் அறிவியல் அறிஞர்கள் அங்கு உருவாகின்றனர். அவர்கள் விரும்பும் கல்வியைப்போதித்ததால் அடைந்த பெரும் பலன் இதுவாகும்.

எனவேதான் அறிஞர் ஒருவர் "ஆசிரியர்களின் வேலை மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது அல்ல. படிப்பில் பிரியம் உண்டாக்குவதேயாகும்" என்றார்.

சிலருக்கு படிப்பில் பிரியம் இல்லை. எந்த நேரம் பார்த்தாலும் ஓவியம் தீட்டுவதில் மூழ்கியிருப்பர். இவர்கள் தேர்வில் எப்போதும் தோல்வியடைவர். ஆனால் அவர்கள் ஓவியத்துறைக்கு திரும்பிவிட்டாலோ அவர்கள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி வெற்றிவாகை சூடுவர். காரணம் அவர்களுக்கு படிப்பில் பிரியமில்லை. அதனால் மனம் குவிவதில்லை. படம் தீட்டவேண்டும் என மனம் விரும்புகிறது. அதில் முழுதாய் ஈடுபடுகின்றனர்.

எனவே நாம் முதலில் செய்யவேண்டியது மனத்தை விரும்பிய ஒன்றில் செலுத்தவேண்டும். மனத்தை செலுத்தவேண்டிய விடயத்தை விரும்பவேண்டும். அப்போதே வெற்றி கிடைக்கும்.

நன்றி : அப்துற் றஹீம்(நூலாசிரியர்)

0 comments

இஸ்லாத்திக்கு எதிராக செயற்படும் பிரிடிஷ்காரார்கள்?

இஸ்லாத்திக்கு எதிராக செயற்படும் பிரிடிஷ்காரார்கள்?


இஸ்லாத்தின் எதிரிகள் ரஸூல்(ஸல்) அவர்களின் காலம்முதல் இன்றுவரை இஸ்லாத்தை அழிக்க முயன்றுவருகிறார்கள். தற்காலத்தில் கம்பியூ னிஸவாதிகள், கிறிஸ்தவர்கள்,யூதர்கள் போன்ற பலர் பல்வேறு திட்டங்களுடன் இஸ்லாத்திக்கு எதிராக செயற்படுகிறார்கள்.தந்திரவிளையாட்டுக்களில் ஈடுபட்டு,நேர்வழியைப் பின்பற்றும் அஹ்லுஸ்ஸூன்னாக்களின் மீது அவதூறுகள் கட்டவிழ்க்கும் முஸ்லிம்கள் என்ற போர்வையில் வாழும் நயவஞ்சகர்கள்,மேற்குறிப்பிட்ட இஸ்லாத்தின் எதிரிகளோடு ஒன்றாக செயற்படுபவர்களே!,இவர்கள் அஹ்லுஸூன்னாவை அழிப்பவர்கள் ஆகும்.


இவ்வாறு தூய இஸ்லாத்தை பிரிவடையச்செய்ய முன்னோடியாகாக இருந்தவர்கள் பிரிடீஷ்காரர்களே!, இப்பிரிடிஷ்காரர்கள், இஸ்லாத்தில் பிளவுகளை ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிப்பதற்காக அவர்களின் வளங்களை,பணங்களை, தொழிநுட்பத்தை, அரசியல்வாதிகளை, எழுத்தாளர்களைப் பயன்படுத்துகின்றனர்.


உதுமானிய கிலாபத் காலப்பகுதியில்,இஸ்லாத்திக்கு எதிராகச்செயற்படுவதற்கு பொதுநலவாய அமைச்சு என்பதை உருவாக்கி,அதிலிருந்து இஸ்லாத்திக்கு எதிராகச்செயற்பட பல ஆண்,பெண்களை பயிற்றுவித்து உலகின் பல்வேறு இடங்களிக்கு அனுப்பினார்கள்,இவ்வாறு சென்றவர்கள் முஸ்லிம்களிடம் உள்ள பலவீனங்களை அறிந்து,இஸ்லாத்தில் கொள்கைரீதியான பிளவுகளை ஏற்படுத்தினர்.இதனால் அஹ்லுஸூன்னாவுக்கு மாற்றமான புதியகொள்கைள் பரவின.இம்மார்க்க ரீதியான பிளவே  உஸ்மானியகிலாபத்தின் வீழ்ச்சிக்கு அடிபப்படைக்காரணமாக அமைந்தது.


ஒரு சமுகம் தனது கடந்தகாலவரலாற்றைக்கற்கும் போது அது தன்பழங்கால பெருமைகளை உணர்ந்துபுத்துணர்வும்,எழிச்சியும் பெறமுடியும் என்பது மட்டுமன்றி, நிகழ்காலப்பிரச்சினைகளிக்குத் தேவையான படிப்பினைகளைப் பெறமுடியும். என்பதற்கு இணங்க நாம் எமது வரலாற்றை சரியான முறையில் படித்து,தெளிவான விளக்கங்களை(,படிப்பினைகளை) பெறமுயற்சிப்போம்.

நன்றி :  Ifham Nawas
Wednesday, March 5, 2014 0 comments

கஹட்டோவிட்ட வரலாறு

கஹட்டோவிட்ட வரலாறு



அறிமுகம்

மேல் மாகாணத்தில், கம்பஹா மாவட்டத்தில், அத்தனகல்ல தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள, நூற்றுக்கு நூறு முஸ்லிம்களைக் கொண்ட கிராமமே கஹட்டோவிட்ட. இது, நிட்டம்புவ - வல்கம்முல்ல ஊடான கிரிந்திவல(185) பாதையில், நிட்டம்புவ நகரில் இருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. கஹட்டோவிட்டாவின் ஓர் எல்லையாக ஓடுகின்ற 'அத்தனகலு ஓயா', இதன் அழகுக்கும் பசுமைக்கும் இன்னும் வலிமை சேர்க்கின்றது.இலங்கையில், முஸ்லிம்களை மாத்திரம் உள்ளடக்கிய ஒரு சில ஊர்களில் இதுவும் ஒன்றாக இருப்பது இதன் ஒரு சிறப்பம்சமாகும். நாடளாவிய ரீதியில்,கல்வி, உயர் அரச பதவிகள், மார்க்க அனுஷ்டானங்கள், அரசியல் போன்ற பல்வேறு காரணிகளால் ஓரளவு பிரபல்யமடைந்த ஊராக கஹட்டோவிட்ட காணப்படுகின்றது. இதன் தற்போதைய சனத்தொகை சுமார் 6000.

பெயரும் காரணமும்
  ,  
கஹட்டோவிட்ட என்ற பெயர் எவ்வாறு வந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றில் மிகவும் பொருத்தமானதாக பின்வரும் தகவலைக் குறிப்பிடலாம்.
  , 
இந்த ஊரின் எல்லையூடாகச் செல்லும் அத்தனகலு ஓயாவின் கரையில் அக்காலம் தேயிலைச் செடிகள் காணப்பட்டன. ஆற்றோரம் என்பதற்கு சிங்களத்தில் 'ஒயிட்டி' என்றும், தேயிலைக்கு 'கஹட்ட' என்றும் வழங்குவதன் காரணமாக, 'கஹட்ட' மற்றும் 'ஒயிட்டி' ஆகிய இரண்டையும் இணைத்து, 'கஹட்டோவிட்டி'( கஷ்டோவிட்டி)என்று அழைக்கப்பட்டு, பின்னர் மருவி, 'கஹட்டோவிட்ட' என்ற பெயர் பெற்றதாகக் குறிப்பிடப்படுகின்றது. அண்மைக்காலம் வரை இவ்வூரின் சில பகுதிகளில் தேயிலைச் செடிகள் இருந்ததற்கான தக்க சான்றுகள் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது 'மஸ்ஜித் ஜாமிஉ'அமைந்துள்ள காணிக்கு எதிரே, வீதியின் மறுபக்கமாக இருந்த காணிகள், 1960 களில் கூட, 'தேயிலைத் தோட்டம்' என அழைக்கப் பட்டமை இதற்கு சிறந்த சான்றாகும்.
    
கஹட்டோவிட்ட 400 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட ஒரு புராதன கிராமம். கஹட்டோவிட்ட கிராமத்துக்கு முஸ்லிம்கள் எவ்வாறு, எங்கிருந்து வந்தார்கள் என்பதற்கு இரு வகையான தகவல்கள் கூறப்படுகின்றன.
  
முதலாவது தகவல்:- கிறிஸ்துவுக்கு முன்னரே அறேபியர் வர்த்தக நோக்கில் இலங்கைக்கு வந்துபோனதாக நிறைய சான்றுகள் உள்ளன. அத்துடன் கி.பி. 8ம் நூற்றாண்டுகளில் அறேபிய வம்சாவழியிலான முஸ்லிம் குடியேற்றங்கள் பேருவலை, காலி, அட்டுலுகம போன்ற கரையோரப் பிரதேசங்களில் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இலங்கைக்கு ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர் கரையோரங்களில் குடியேறிய முஸ்லிம்கள்,இலங்கையின் வர்த்தகத்தில் தனியான இடத்தைப் பெற்றிருந்தனர். ஆயினும் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது முஸ்லிம்களின் வர்த்தகத்தைத் திட்டமிட்டு அழித்து, அவர்களை விரட்டிவிட்டு, வர்த்தக மேலாதிக்கத்தை தாம் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டனர். சீதாவக்கை இராச்சியத்தை ஆண்ட மாயாதுன்ன அரசன் முஸ்லிம்களுக்கு உதவிபுரிய முன்வந்தாலும், கோட்டை இராச்சியத்தை ஆண்ட 7ம் புவனேகபாகு, போர்த்துக்கேயரின் வேண்டுகோளின் படி, முஸ்லிம்களைக் கரையோரங்களில் இருந்து துரத்தினான்.போர்த்துக்கேயரின் இந்நடவடிக்கைகளால் நாட்டின் உட்பகுதிக்குச் சென்ற முஸ்லிம்கள், நீர்நிலைகளை அண்டிய பிரதேசங்களில் குடியமர்ந்தனர். இதன் காரணமாகவே இன்றும் முஸ்லிம்கள் நாடளாவிய ரீதியில் சிதறி வாழ்கின்றனர்.
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில், அவர்களின் பிரதான ஒரு தளமாக மல்வானை காணப்பட்டது. இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை போர்த்துக்கேயரிடம் கையளிப்பதற்கான அல்லது எமது நாடு இன்னொரு நாட்டின் ஆளுகைக்கு உட்படுவதற்கான முதலாவது ஒப்பந்தம்,மல்வானையிலேயே நடந்தது. இதனால் இவ்வொப்பந்தம் 'மல்வானை ஒப்பந்தம்'என்றும் அழைக்கப்படுகின்றது.

போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து துரத்துவதற்கு, சீதாவக்கை மன்னன் மாயாதுன்ன, தன் மகன் இராஜசிங்கனின் தலைமையில் முல்லேரியா போரை நடத்தினான். 1562 இல் இடம்பெற்ற இப்போரின் போது, மல்வானை பகுதியில் இருந்த முஸ்லிம்கள் இராஜசிங்கனுக்கு உதவியதால், அங்கிருந்த முஸ்லிம்களைப் போர்த்துக்கேயர்கள் இம்சைப்படுத்தினர். இதனால் அப்பிரதேசத்தை விட்டு பல முஸ்லிம்கள், களனி ஆறு வழியே ஹங்வெல்ல,பூகொட பிரதேசங்களுக்கு வந்து, பின்னர் கஹட்டோவிட்ட, திஹாரிய போன்ற இடங்களில் வந்து குடியேரியனர். இது 'கம்பஹா மாவட்ட முஸ்லிம்களின் வரலாறு' என்ற ஆய்வு நூலில் இடம்பெற்றுள்ளது.

கஹட்டோவிட்டாவுக்கு முஸ்லிம்களின் வருகை பற்றிய அடுத்த தகவல் இவ்வாறு அமைந்துள்ளது.
  
இரண்டாவது தகவல்:-மலையாளத்திலிருந்து இடம்பெயர்ந்து, அத்தனகல்ல,பண்டாரஓவிட்ட என்ற இடத்துக்கு வந்திருந்த ஷேக் அப்துல் காதர் மற்றும் அவரது தோழர்களை சந்திக்க, அட்டுலுகமவிலிருந்து முஹம்மத் காஸிம் என்பவர் அடிக்கடி வந்துள்ளார். முஹம்மத் காஸிம், பல்துறை சார்ந்த ஒரு திறமைசாலியாக இருந்ததாகவும், இச்சந்தர்ப்பத்தில் அவ்வழியே வந்த சிங்கள மன்னன் ஒருவன் இவரது திறமைகளைக் கண்டு இப்பிரதேசத்தை அன்பளிப்பாக வழங்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்நிகழ்வின் பின்னர்,கஹட்டோவிட்ட பிரதேசம் முஸ்லிம்களின் குடியிருப்பாக மாறி, பல்வேறு இடங்களிலிருந்தும் மக்கள் இங்கு வந்து குடியமர்ந்தனர்.
  
சன்மார்க்க எழுச்சி


கஹட்டோவிட்டாவின் மார்க்க எழுச்சி வரலாறு பற்றிக் குறிப்பிடும் போது இருவரின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.இவ்விருவரும் அறபு நாடுகளிலிருந்து சன்மார்க்க போதனைக்காக கஹட்டோவிட்டாவுக்கு வந்துள்ளனர். 1700 களின் பிற்பகுதியில் ஷெய்க் பாதிப் மவ்லானா (யமனி) அவர்களும், ஷெய்க் முபாரக் மவ்லானா அவர்களும் வருகை தந்து, ஊரின் மார்க்க எழுச்சியில் பெரிதும் பங்காற்றியுள்ளனர். ஷெய்க் முபாரக் மவ்லானா இங்கு நீண்டகாலம் தங்கியிருக்காவிட்டாலும், ஷெயக் பாதிப் மவ்லானா அவர்கள் தாம் மரணிக்கும் வரை இங்கு தங்கியிருந்து மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் இருவரினதும் போதனைகளை நடைமுறைப்படுத்த இரு தக்கியாக்களும் கட்டப்பட்டன.

இதன் பின்னர் 1792 இல், இப்பிரதேசத்தின் முதல் பள்ளிவாயல்,கஹட்டோவிட்டாவுக்கும் உடுகொடைக்கும் இடையிலிருந்த கொடல்ல எனும் இடத்தில் கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது. இது மோதரான அப்பா அவர்களின் காணியில், சின்ன லெப்பை சுலைமான் லெப்பபை அவர்களின் தலைமையில் கட்டப்பட்டது.

தற்போதுள்ள முஹியத்தீன் பள்ளிவாசல், கறுத்த ஆலிம் அப்பா அவர்களின் வழிகாட்டலில், 1795 இல் அத்தனகல்லையிலிருந்து குடியேறிய அஹமது லெப்பையால் வழங்கப்பட்ட காணியில் கட்டப்பட்டது. இவரே இப்பள்ளியின் முதல் கதீபும் ஆவார். கஹட்டோவிட்ட ஜும்ஆ மஸ்;ஜித் என்றழைக்கப்பட்ட இப்பள்ளிவாசல், 1970 இல், முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் எனப் பெயர் பெற்றது.

இதன் பின்னர் இரண்டாவது பள்ளிவாசலாக, 1974 இல், மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் ஆரம்பிக்கப் பட்டது. புஹாரி ஆலிம் என்பவருக்குச் சொந்தமான கட்டடமொன்றில் இயங்கி வந்த குர்ஆன் மத்ரஸாவே இவ்வாறு பள்ளிவாசலாக மாற்றம் பெற்றது.

தற்போது, 2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மஸ்ஜித் ஜாமிஉ ஜும்ஆ பள்ளி அடங்கலாக மொத்தம் மூன்று ஜும்ஆ பள்ளிவாசல்கள் கஹட்டோவிட்ட கிராமத்தில் உள்ளன.
  
கல்வி


ஆரம்பத்தில் கல்வி நடவடிக்கைகள் பள்ளிவாசல்களை மையமாகக் கொண்டே இயங்கி வந்தன. இதன் அடிப்படையில், முஹியத்தீன் பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ள, பாதிபிய்யா தக்கியாவுக்கு சொந்தமான கட்டடத்திலேயே முதலாவது பாடசாலை அமைந்திருந்தது. பின்னர், 1920 இல், அரசினர் பாடசாலையாக இது மாற்றம் பெற்றது. இதன் பின்னர், இப்பாடசாலை,தற்போதைய அமைவிடத்துக்கு மாற்றப்பட்டு, இப்போது அல்பத்ரியா ம.வி. என்ற பெயரில் இயங்கி வருகின்றது.

அடுத்து, பெண்களுக்கான தனியான பாடசாலை 1946 இல் ஆரம்பிக்கப்பட்டது.இன்று ஒரு தனியார் சர்வதேசப் பாடசாலை அடங்கலாக மொத்தம் மூன்று பாடசாலைகள் செயற்பட்டு வருகின்றன.

கஹட்டோவிட்ட, சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களோடு ஒப்பிடும் போது,கல்விமட்டத்தில் மிகச் சிறந்த நிலையில் அன்றும் இன்றும் இருந்து வருகின்றது.உதவித் தேர்தல் ஆணையாளர், உதவிப் பரீட்சை ஆணையாளர் போன்ற உயர் அரச பதவிகளிலும் மற்றும் மருத்துவம், பொறியியல், சட்டம், ஊடகத்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் அதிகமானோர் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 மர்ஹூம் மஸ்ஊத் ஆலிம் முதல் இன்று வரை மார்க்கத் துறையிலும் பலர் பல்வேறு இயக்கங்களில் இருந்து தொண்டாற்றி வருகின்றனர்.

இவை தவிர 1959 ஆம் ஆண்டிலே கஹட்டோவிட்டாவுக்கான தனியான உபதபாற்கந்தோர் திறந்துவைக்கப்பட்டது. இங்கு 1981 இல் மின்சார இணைப்பும் வழங்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்ட ஒரு தனித்துவ அடையாளத்தைப் பிரதிபலிக்கும், கட்டுக்கோப்பான சமுக அமைப்பைக் கொண்ட ஒரு ஊராக கஹட்டோவிட்ட திகழ்ந்து வருகின்றது.
  
Saturday, February 22, 2014 0 comments

தென் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம்

தென் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம்

Dr.Shukri
தென் இலங்கை முஸ்லிங்களின் வரலாறானது இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றின் ஓர் அங்கமாகும். எனவே, இலங்கை முஸ்லிங்களின் வராறு கீழைத்தேய உலகிற்கும் மேற்குலகிற்குமிடையிலான வணிகத் தொடர்பின் பின்னணியிலும், பாரசிக வளைகுடாப் பிரதேசத்திற்கும் சீனாவிற்குமிடையிலான வணிகத் தொடர்பின் பகைப்புலனிலும் ஆராயப்படுவது போன்று, தென் இலங்கை முஸ்லிங்களின் வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பின்னணியிலேயே நோக்கப்படல் வேண்டும்.வரலாற்றுப் பின்னணி மேற்குலகிலிருந்து கிழக்கிற்கான கடல் பயணத்தை மேற்கொள்வதற்கு நன்னம்பிக்கை முனையூடான பாதை (CAPE ROUTE) கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர், மேற்கையும், கிழக்கையும் பிணைக்கும் இரண்டு



முக்கிய கடற்பாதைகளாக பாரசிக வளைகுடாவும், செங்கடலும் விளங்கின. இவற்றை அதன் இரு மருங்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ள அரபுத் தீபகற்பத்தின் கேந்திர நிலையானது, 'இந்து சமுத்திர வணிகம்' என அழைக்கப்பட்ட இவ்வணிகத்தில் அரபிகள் மிக முக்கியத்துவ இடத்தை வகிக்கும் நிலைய அளித்தது. பாரசீக வளைகுடாவிற்கும், சீனாவிற்குமிடையில் அமைந்திருந்த இந்த வணிகப்பாதையில் துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை வகித்தன. இந்த துறைமுகங்கள் வணிக மத்திய தலங்களாக விளங்கின. இந்த வணிக மத்திய நிலையங்களின் அமைப்பு, முக்கியத்துவம் ஆகியவற்றை இந்து சமுத்திரத்தின் 'காற்று வீசும் முறை' யே (WIND SYSTEM) நிர்ணயித்தது.

உதாரணமாக பாரசிக வளை குடாவிலிருந்து,  ஸுமத்திராவிற்கு ஒரே பருவப் பெயர்ச்சிக் காற்றை (MONSOON WIND)  ப் பாயன்படுத்திப் பயணத்தை மேற்கொள்ளுதல் சாத்தியமற்றதாகக் காணப்பட்டது. எனவே, இக்கப்பல்கள் இந்தியக் கரையிலோ அல்லது இலங்கைக் கரையிலோ உள்ள துறைமுகங்களில் தரித்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. வியாபாரச் சரக்குகள் காணப்படல், பாதுகாப்பான துறைமுகங்கள், உணவும் குடிநீரும் காணப்படல், கப்பல்களைப் பழுது பார்ப்பதற்கான வசதிகள் உள்ளமை ஆகிய அம்சங்களை இத்துறைமுகங்கள் தெரிவு செய்யப்படுவதை நிர்ணயித்தன.

பாரசீகர், அராபியர், சீனர் ஆகியோர் பங்குற்றிய இந்த இந்து சமுத்திர வணிகத்தில் இலங்கையின் வடகிழக்கு, மேற்கு தெற்கு கரையோரங்களில் காணப்பட்ட துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை வகித்தன. திருகோணமலை, கொழும்பு, மன்னார் என்பன இவ்வகையில் முக்கிய துறைமுகங்களாக விளங்கின. இலங்கையின் தெற்கு கரையோரப் பகுதியானது காலி போன்ற இயற்கைத் துறைமுகங்களை மட்டுமன்றி பல பாதுகாப்பான குடாக்களையும் (Sheltered Bays) கடல் சார்ந்த உட்பிரதேசங்களையும் (INLETS) கொண்டுள்ளது. இந்த அமைப்பைப் பெற்றிருந்த தெற்குக் கரையிலுள்ள 'நிலவளாதித்த' என அழைக்கப்பட்ட மாத்தறை 'வலுகாமம்' என அழைக்கப்பட்ட வெலிகாமம் 'பீமாதித்த' எனப்பெயர் பெற்ற பெருந்தோட்ட ஆகிய பிரதேசங்கள் கால வளர்ச்சியில் வணிகத் துறைமுகங்களாக வளர்ச்சியடைந்தன.

இந்து சமுத்திர வணிகத்தில் பாரசிகர்கள் மிக ஆரம்பகாலத்திலிருந்தே மிக முக்கிய இடம் வகித்தனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் பாரசிக முஸ்லிம் வணிகர்கள் சீனாவிலுள்ள கண்டன் (CANTON) துறைமுகம் வரை பயணம் செய்தனர். கி.பி. 717ம் ஆண்டு வஜ்ரபோதி என்பார் இலங்கையிலிருந்து சுமாத்ரா வரை முப்பத்து ஐந்து பாரசிகக் கப்பல்களைக் கொண்ட ஒரு கூட்டத்தோடு பயணம் செய்ததாக வரலாறு குறிப்பிடுகின்றது. பாரசிகரைப் போன்றே அராபியரும் இந்து சமுத்திர வணிகத்தில் சிறப்பிடம் பெற்றனர்.

இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன்னர் பாரசிகர், அராபியர் என்றவகையில் அவர்கள் இனங்காணப்பட்டாலும், இஸ்லாத்தின் தோற்றத்தின் பின்னர், குறிப்பாக கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் பாரசிகர், அராபியர், ஆகிய இருசாராரும் அராபியர் என்றே இனங்காணப்பட்டனர். இலங்கையில் கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் கணிசமான அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டதை வரலாற்றாசிரியர் அவ் - பலாஸசரியின் குறிப்புக்கள் உணர்த்துகின்றன.

இலங்கையின் கரையோரத் துறைமுகங்களைப் பொறுத்தளவில் ஆரம்பகாலப் பிரிவில் வடக்குப் பகுதியில் காணப்பட்ட துறைமுகங்கள் இவ்வணிகத்தில் முக்கியம் இடம் வகித்தன. அண்மையில் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருள் சான்றுகள், இக்காலப்பிரிவில் இலங்கைக்கும் பாரசிக வளை குடாவுக்குமிடையில் நடைபெற்ற வணிகத்தில் திருகோணமலை, மாந்தைத் துறைமுகங்கள் முக்கிய இடம் வகித்ததை உறுதிப்படுத்துகின்றன.

கி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொராம் நூற்றாண்டு வரையிலாக காலப்பிரிவின் மத்திய கிழக்கைச் சார்ந்த மட்பாண்டங்களும், இதேகாலப்பிரிவின் சீனாவைச் சார்ந்த மட்பாண்டங்களும் மாந்தையில் கண்டுபிடிக்கபட்டதாது, இக்காலப்பிரிவில் மாந்தை ஒரு முக்கிய வணிக மத்தியதலமாக விளங்கியதைக் குறிக்கின்றது. கி.பி. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட அரபுச் சிவாசனமும், இதேகாலப்பிரிவைச் சேர்ந்த புளியந்தீவு அரபுச் சிவாசனமும், இக்காலப்பிரிவில் கொழும்பு, மன்னார் ஆகிய பிரதேசங்கள் அரபு வணிகர்களின் முக்கிய குடியேற்றங்களாக விளங்கின என்பதற்குச் சான்றாக அமைகின்றன. திருகேபணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பொலன்னறுவை ராஜதானியின் இறுதிக்காலப் பிரிவைச் சேர்ந்த அரபுச் சிலாசனம் அது ஒரு முக்கிய அரபுக் குடியேற்றமாக இக்காலப் பிரிவில் விளங்கியதற்குச் சான்றாக அமைகின்றது. இவை கி.பி. 10, 11, 12ம் நூற்றாண்டுகளில் இலங்கை – அராபிய வணிகத்தில் வடக்குப் பகுதியைச் சேர்ந்த துறைமுகங்கள் முக்கிய இடத்தை வகித்ததை உணர்த்துகின்றன.

பதின்மூன்றாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் பொலன்னறுவை ராஜதானியின் வீழ்ச்சியோடு இலங்கையின் அரசியல் தலைநகரம் தீவின் தென்மேற்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அத்தோடு, கடல் வணிகத்தின் மத்திய நிலையும் வங்காள விரிகுடாவிலிருந்து அராபிய கடல் பிரதேசத்தை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாகவே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இலங்கையின் அரசர்கள் தென்மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த தலைநகரங்களால் கவரப்படலாயினர்.

இக்காலப்பிரிவிலேயே பேருவலை, காலி, வெலிகாமம், மாத்தறை போன்ற தென்மாகாண கடல் துறைமுக நகரங்களில் அரபு வணிகர்கள் பெருமளவு குடியேற ஆரம்பித்தனர். இக்காலப்பிரிவில் சீனாவிலிருந்து பாரசிக வளைகுடாவினை ஒரு சீனக் கப்பலில் பயணம் செய்த மார்கோபோலோ இலங்கையின் கரையோரப் பகுதிகளில் பெருமளவு அரபு வணிகர்கள் காணப்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

கி.பி. 13, 14ம் நூற்றாண்டுகளில் தென்னிலங்கையில் முஸ்லிங்கள் வணிகத்துறையில் மிகச் சிறப்புற்று விளங்கியதையும், குறிப்பாக அவர்களின் முக்கிய வணிக மத்திய நிலையமாக காலி விளங்கியதையும் 1344ல் இலங்கையைத் தரிசித்த அரபுப் பயணி இப்னு பதூதாவின் குறிப்புக்கள் மூலம் நாம் அறிய முடிகின்றது. இப்னு பதூதா கொழும்பில் 'ஜலஸ்தி' என்னும் பெயருடைய ஒரு கப்பல் தளபதியைச் சந்தித்ததாகவும் அவருடன் 500 அபிஸீனியர்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார். 'ஜலஸ்தி' என்ற பதம் துறைமுகத்தோடு தொடர்புடைய பதமாக ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. இப்னு பதூதாவின் குறிப்புகள் தேவந்துறை (தெவிநுவர) முஸ்லிம்களின் ஒரு முக்கிய வணிகக் குடியேற்றமாக விளங்கியதை உணர்த்துகின்றன.

தெவந்துறையை 'தீனவார்' எனக் குறிப்பிடும் இப்னு பதூதா அங்கு பல முஸ்லிம்கள் வணிகர்கள் காணப்படுவதாக அவரது பிரயாண நூலில் கூறுகின்றார். காலித் துறைமுகத்தில் முஸ்லிம்களின் வணிகக் கப்பல்கள் அக்காலப்பிரிவில் கணிசமானளவு காணப்பட்டிருக்கலாம் என்பதனை இப்னு பதூதாவின் குறிப்புகளிலிருந்து நாம் ஊகித்து உணரமுடிகின்றது. காலியின் தான் இப்ராஹிம் என்னும் பெயருடைய கப்பல் தலைவரொருவரைச் சந்தித்தாகவும், காலி நகரில் அவரது வீட்டில் விருந்தினராகத் தான் தங்கியதாகவும் அவர் தனது பிரயாண நூலில் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பாக தென்மாகாணத்தில் மிகப் பரவலாக சிங்கள மக்கள் மத்தியில் வழக்கிலுள்ள சிங்களப் பெயரான 'ஸஹபந்து' (SAHABANDU) என்னும் சிங்களப் பெயர் 'ஷாஹ் பந்தர்' (SHAH BANDAR) என்ற பாரசிகப் பெயரின் சிங்கத் திரிபேயாகும் என்ற உண்மையும் கருத்தில் கொள்ளப்படல் வேண்டும். பாரசிக மொழியில் 'ஷாஹ்' எனில் அரசன் அல்லது தலைவன் எனவும், 'பந்தர்' எனில் துறைமுகம் எனவும் பொருள்படும். எனவே, 'ஷாஹ் பந்தர்'எனில் துறைமுகத் தலைவன் என்பது கருத்தாகும். இது முஸ்லிம்கள் தென்னிலங்கைப் பிரதேசத்தில் முக்கிய துறைமுகங்களில் தலைவர்களாகப் பணிபுரிந்துள்ளார்கள் என்பதற்குச் சான்றாக உள்ளது. 1911ம் ஆண்டு காலி கிறிப்ஸ் வீதியில் காலி மாகாண என்ஜினியராகப் பணிபுரிந்த எச். எப். டொமலின் (TOMALIN) கண்டெடுத்த சீனம், பாரசிகம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் அமைந்துள்ள காலி மும்மொழிச் சிலாசதைப் (GALLE tri  lingual inscription)  முக்கியம் பெறுகின்றது.

கி.பி. 1410ம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த கப்பல் தளபதி செங்ஹோ (CHENG HO) வினால் பொருத்தப்பட்ட இச்சிலாசனம் பாரசிகம், தமிழ், சீனம் ஆகிய மூன்று மொழிகளிலும் அமைந்துள்ளது. பௌத்த, இந்து, முஸ்லிம்களின் வணக்கத்தலங்களுக்கு சீன மன்னன் அனுப்பி வைத்த அன்பளிப்புகள் பற்றி இச்சிலாசனம் குறிப்பிடுகின்றது. சீனமொழியில் காணப்படும் குறிப்புகள் புத்தரைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. தமிழில் 'தேனாவரை – நயினார்' என்ற வார்த்தை உள்ளது. இதனைப் பேராசிரியர் பரணவிதான தெவிந்துறைக் கடவுளைக் (GOD OF DEUINUWARA) குறிப்பதாகக் கொள்கின்றார். பாரசிக வரிகள் பெரும்பாலும் தெளிவற்றுக் காணப்படுகின்றன. இதனை வாசித்து இனங்கண்ட இந்தியாவைச் சேர்ந்த, ஜனாப் குவாஜா முஹம்மத் அஹ்மத், இதில் 'நுருல் இஸ்லாம்' இஸ்லாத்தின் ஒளி என்னும் சொல் காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார்.

 இந்த சிலாசனம் காலியில் வாழும் வணிர்களின் நன்மை கருதியே பொருத்தியிருக்கப்படல் வேண்டும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலங்கையில் வெளிநாட்டு வணிகம், வெளிநாட்டு வணிகர்களின் கையிலிருந்ததையும், இவ்வணிகத்தில் பாரசிக முஸ்லிம்கள் கணிசமான இடத்தை வகித்தமையும், அவர்கள் காலியில் காணப்பட்டதையும் இச்சிலாசனத்தின் மூலம் நாஙகள் அனுமானிக்க முடிகின்றது. குடியேற்றங்கள் காணப்பட்டதற்கான சான்றுகள், இக்காலப்பிரிவில் சிங்கள மொழியில் எழுந்த 'ஸந்தேஸ காவிய' என்னும் தூது இலக்கியங்களில் காணப்படுகின்றன.

பராக்கிரமபாகு மன்னனின் காலப்பிரிவில் (1440 – 1450) இயற்றப்பட்ட 'கோகில ஸ்ந்தேஸய' 'கிராஸந்தேய' ஆகிய நூல்கள் சோனகப் பெண்களை 'யொன்வியர்' எனக் குறிப்பிடுவதுடன், 'மஹாவெலி கம்' (வெலிகாமம்) முஸ்லிம் குடியேற்றம் பற்றியும் குறிப்பிடுகின்றது.

கி.பி. பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் மேற்குக் கரையோரப் பகுதியில் உள்ள துறைமுக நகரங்களான கொழும்பு, களுத்துறை, பேருவலை, காலி, வெலிகாமம், மாத்தறை ஆகிய இடங்களில் பெருமளவு முஸ்லிம் குடியேறியிருந்தனர். இக்காலப்பிரிவில் இந்து சமுத்திரா வணிகத்தில் ஒரு முக்கிய மாற்றம் நிகழ்கின்றது.

இந்து சமுத்திரத்தில் இலங்கையில் அரபுக் குடியேற்றங்கள் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்த தென்னிந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதியான மலைபார் பிரதேசத்திலும், கிழக்குக் கரையான மஃபர் பிரதேசத்திலும் அரபுக் குடியேற்றங்கள் காணப்பட்டன. மஃபர் பிரதேசத்தின் பிரதான அரபு வணிகக் குடியேற்றமாக காயல்பட்டணம் விளங்கியது. இப்பிரதேசத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கும், பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குமிடையிலான அரபு நாணயங்களை கால்டுவெல் (CALDWELL) கண்டுபிடித்த காயல்பட்டணம் பிரதேசம் மிக ஆரம்ப காலத்திலிருந்தே ஒரு முக்கிய அரபு வணிக மத்திய தலமாக விளங்கியதைக் குறிக்கின்றது. இதுபோன்றே பஸார் பகுதியின் முக்கிய துறைமுகமான சிரங்க நூர் (CIRANGANORE) மிக ஆரம்பகாலத்திலிருந்தே அரபு வணிகர்களின் ஒரு முக்கிய குடியேற்றமாக விளங்கியது.

'காயல்' என அழைக்கப்பட்ட காயல்பட்டணத் துறைமுகம் இலங்கை வணிகத்தில் முக்கிய இடம் வகித்தது. சோழர்களின் வீழ்ச்சியின் பின்னர் தமிழகத்தில் முஸ்லிம்களின் முக்கிய வணிக மத்தியதலமாக காயல்பட்டணம் வளர்ச்சியடைந்தது. காயல்பட்டண வணிகர்கள் இலங்கையில் மேற்குக் கரையோரத்தில் பல துறைமுகங்களை உள்ளடக்கிய வகையில் அவர்களது வணிகத்தை பரவலாக்கியிருந்தனர். பதினான்காம், பதினைந்தாம் நூற்றாண்டுகளில் தென்னிந்திய முஸ்லிம் வணிகர்கள் இந்து சமுத்திர வணிகத்தில் முக்கிய இடம் வகித்தனர்.

காலியில் கண்டுபிடிக்கப்பட்ட 1401 ஆண்டைச் சேர்ந்த செங்ஹோவின் (Chamy – Ho) வின் மும்மொழிச் சிலாசனத்தில் பாரசிக, சீன மொழிகளுடன், தமிழ் மொழியும் இடம்பெற்றிருப்பதானது இக்காலப்பிரிவில் தமிழ் தென்-கிழக்காசிய, இந்து சமுத்திர வணிக மொழிகளுள் ஒன்றாக விளங்கியதை உணர்த்துகின்றது. இக்காலப்பிரிவிலேயே இலங்கை முஸ்லிம்களுக்கும் குறிப்பாக தென்னிந்தியாவின் மேற்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்ந்த, மலபார், காயல்பட்டணம், கிழக்கரை முஸ்லிம்களுக்கிடையில் மிக நெருங்கிய வணிகத் தொடர்பும், இறுக்கமான கலாசார, பண்பாட்டு இணைப்பும் ஏற்படுகின்றது.
கி.பி. 1505ம் ஆண்டு போர்த்துக்கேயரின் வருகையோடு, இலங்கை முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய உலகுக்கும் இடையிலான கலாசார, பண்பாட்டுத் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், இலங்கை முஸ்லிம்களுக்கும், தென் இந்தியரின் மஃபர் பகுதியைச் சார்ந்த (காயல்பட்டணம்) முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்ட கலாசார, பண்பாட்டுத் தொடர்பே இலங்கை முஸ்லிம்களின் மத, கலாசார, பண்பாட்டுத் தனித்துவத்தைப் பாதுகாக்கத் துணைபுரிந்தது.

இலங்கையில் போர்த்துக்கேயரின் வருகை நிகழ்ந்த காலப்பிரிவில், இலங்கையின் தென், தென்மேற்குக் கரைப்பகுதியில் கொழும்பு, களுத்துறை, பேருவலை, அலுத்கம, காலி, வெலிகமை, மாத்தறை ஆகிய பகுதிகளில் முஸ்லிம் குடியேற்றங்கள் மிகப்பரவலாகக் காணப்பட்டமே போர்த்துக்கேய வரலாற்று ஆவணங்கள் மூலமாக நாம் அறிய முடிகின்றது என்ற கருத்தை கலாநிதி டீ. பி. அபயஸிங்ஹ தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார். இந்த துறைமுக நகரங்களில் முஸ்லிம்கள் அவர்களது சமூக பரிபாலன விடயங்களுக்காக தலைவர்களை நியமித்திருந்தனர். 1614 ஆண்டு அலுத்கமையில் முஸ்லிம் சமூகம் மிக ஸ்திர நிலையில் மூன்று தலைவர்களைக் கொண்டு இயங்கியது.

போர்த்துக்கேய வரலாற்று ஆவணங்கள் 'தோம்பு' (TOMBO)  என அழைக்கப்படுகின்றன. இவற்றுள் ஓர் ஆவணமான ருவா டீ மோரோஸ் (Rua dos Mouros) என்னும் தோம்பு வெலிகாமத்தில் முஸ்லிம்களுக்கென்றே ஒரு தனிப்பட்ட வீதிகள் காணப்பட்டன என்றும், மாத்தறையில் முஸ்லிம்கள் நகரத்தின் மத்திய சந்தைப் பிரதேசத்திலே (Baza area) முக்கியமாக வாழ்ந்தனரென்றும் குறிப்பிடுவதாக கலாநிதி அபயஸிங்ஹ கருத்துத் தெரிவிக்கின்றார்.

போர்த்துக்கேயர் காலப்பிரிவில் தெற்குக் கரையோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் பல வகையில் தொல்லைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டனர். பலவகையிலும் முஸ்லிம்களின் வணிக முயற்சிகளைச் சீர்குலைக்கும் முயற்சிகள் போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சூழலில் கூட தென்னிலங்கை முஸ்லிம்கள் தமது பொருளாதார பலத்தையும், இஸ்லாமிய தனித்துவத்தையும் பேணி வாழ்ந்தனர்.

கி.பி. 1658ல் இலங்கை டச்சுக்காரரின் ஆட்சிக்கு உட்பட்டது. முஸ்லிம்களைப் பொறுத்தளவில் டச்சுக்காரரும், போர்த்துக்கேயரின் கொள்கையையே பின்பற்றினர். வணிகத் துறையின் முஸ்லிம்களின் செல்வாக்கை முறியடிப்பதை அவர்களது முக்கிய நோக்கங்களுள் ஒன்றாக கொண்டு டச்சுக்காரர் செயல்புரிந்தனர். கி.பி. 1650 காலி முஸ்லிம்கள் தையல் தொழில் மூலம் இலாபமீட்டுவதை அவதானித்த அவர்கள், அந்த வாய்ப்பினை முஸ்லிம்களிடமிருந்து பார்த்து பரங்கியருக்கு வழங்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பாக்கு வியாபாரத்தையும் முஸ்லிம்களின் கையிலிருந்து பரங்கியருக்கு மாற்றும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

காலி, வெலிகாமம், மாத்தறை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் உள்நாட்டிற்குச் சென்று நெல், பாக்கு முதலியவற்றை வாங்கி கண்டி இராசதாணிகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு முஸ்லிம்கள் உள்நாட்டுக்குச் சென்று வியாபாரச் சரக்குகளை வாங்குவதைத் தடுக்கும் முயற்சிகளை டச்சு ஆட்சியாளர் மேற்கொண்டனர். முஸ்லிம்கள் தங்களது செல்வாக்கைப் பரவச் செய்ததைத் தடுக்கும் நோக்கோடு காலி, வெலிகாமம், மாத்தறையைச் சேர்ந்த முஸ்லிம்கள் நகர எல்லையைவிட்டு வியாபாரத்திற்காக வெளியேறக்கூடாது என 1659ம் ஆண்டு ஒரு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

வணிகத்துறையில் மட்டுடன்றி மத விவகாரங்களைப் பொறுத்தளவிலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் டச்சுக்காரர்களின் கீழ் பல பிரச்சினைகளை எதிர்நோக்கினர். டச்சு அதிகாரியான மட்ஸியூகொ (Matsuyeker)'முஹம்மதிய மதத்தின் சாபத்தை ஒழித்துக் கட்டி, கிறிஸ்துவ மதத்தை பரப்புவதை' தனது முக்கிய கொள்கைiயாகப் பிரகடனப்படுத்தினார். இதற்கேற்ப டச்சு அதிகாரி வான் கோயென்ஸ் (VAN GOENS)  மாத்தறை முஸ்லிம்களுக்கு அவர்களது மதக்கடமைகளை நிறைவேற்ற அனுமதியளிக்க வேண்டாமென்றும் நகரத்தின் எல்லைக்குற்பட்ட பிரதேசத்திலோ அல்லது வெளிப் பிரதேசங்களிலோ முஸ்லிம்களின் மதத்தலைவர்களுக்கு இடமளிக்க வேண்டாமென்றும் கட்டளை பிறப்பித்தார். ஆனால் காலப்போக்கில் தன் யதார்த்த நிலையை உணர்ந்த டச்சுக்காரர் அவர்களது பொருளாதாரக் கொள்கையை செயல்படுத்துவதில் முஸ்லிம்களை புறக்கணிக்க முடியாது என்ற உண்மையை உணர்ந்தனர்.

எனவே, முஸ்லிம் சமூகத்துடன் தங்களது தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளத் துணைச்சாதனமாக முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம் அதிகாரிகளை (Meadman) நியமித்தனர். கி.பி. 1762ம் ஆண்டு கொழும்பில் முஸ்லிம்களின் அதிகாரியான உதுமான் கண்டி மேஸ்திரி அய்துருஸ் லெப்பை மரிக்கார் நியமிக்கப்பட்டார். இதுபோன்றே டச்சுக்காரரின் ஆட்சியின் இறுதிக்காலப்பிரிவில் காலி, மாத்தறை ஆகிய நகரங்களிலும் இத்தகைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

1789ம் ஆண்டு சின்ன லெப்பை மரிக்கார் சீதக்காதி லெப்பை மாத்தறை முஸ்லிம்களின் தலைவராக நியமிக்கப்பட்டதாக டச்சு ஆவணங்கள் குறிப்பிடுவதாக கலாநிதி ஜே.பி. கொத்தலாவலை கருத்துத் தெரிவிக்கின்றார். வான் இம்ஹோப் (Van Imhoff)என்னும் டச்சு அதிகாரி 1733ல் மாத்தறையில் முஸ்லிம் கமிஷனர்களை நியமித்தார். இவர் (Moor Commissioner) என அழைக்கப்பட்டனர். டச்சுக்களின் ஆட்சியில் கீழ் உள்ள பிரஜைகள் மாதத்தில் சிலநாட்கள் ஏதாவதொரு அரசாங்கப் பணியில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டது. இது ஊழியம் என அழைக்கப்பட்டது. இத்தகைய ஊழிய வேலைக்கு ஆட்களைத் திரட்டி ஒழுங்குபடுத்துவதே டச்சுக்காரர் நியமித்த அதிகாரிகளின் பணியாக அமைந்தது.

காலியில் உள்ள முஸ்லிம் அதிகாரிகள் காலித் துறைமுகத்தில் பொருட்களை கப்பலில் ஏற்றுதல், இறக்குதல் போன்ற பணிகளுக்கு போதிய ஆட்களைத் திரட்டாத பட்சத்தில் அவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படுவது மட்டுமன்றி, அந்த அதிகாரிகளையே காலில் விலங்கிடப்பட்டு வேலை செய்யும்படி பணிக்கப்படுவார்களென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இவ்வாறு முஸ்லிம்களை அடக்கி, ஒடுக்கி ஆட்சி செய்த டச்சுக்கார் அவர்களது ஆட்சியின் இறுதிக் காலப்பிரிவில் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் ஓரளவு சகிப்புத் தன்மையைக் கடைப்பிடித்தனர். 1789ல் ஆரம்பித்த பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முஸ்லிம்களுக்கு டச்சுக்காரரால் இழைக்கப்பட்ட அநீதிகளை நிவர்த் திக்கும் முயற்சிகள் ஓரளவு மேற்கொள்ளப்பட்டன.
தென்னிலங்கை முஸ்லிம்களின் குடிசனப் பரம்பல் பற்றி நோக்குமிடத்து, போர்த்துக்கேயர் டச்சுக்காரர்களின் ஆட்சிக்காலப்பிரிவில் காலி, மாத்தறை போன்ற முக்கிய நகர்களில் முஸ்லிம்கள் அவர்களின் அடக்கு முறைக்கு ஆளாகிய போது கரையோரப் பகுதியைத் தாண்டி உள்நாட்டிலுள்ள சிங்களக் கிராமங்களை நோக்கி நகர்த்திருக்கலாம் என்பதனை அனுமானிக்க முடிகின்றது. கிருந்தை, மீயல்லை, யக்கலமுல்லை, கொடபிடிய போன்ற கிராமங்கள் இவ்வகையிலேயே தோற்றமெடுத்திருத்தல் வேண்டும் என நாம் கொள்ளலாம்.
தென்னிலங்கை முஸ்லிம்களின் வரலாற்றோடு இணைந்து காணப்படுவது அவர்களின் கலாசாரப் பாரம்பரியமாகும். தென்னிலங்கை முஸ்லிம்களில் யெமன் நாட்டின் ஹஸ்ரமௌத் கலாசாரத்தின் செல்வாக்கு கணிசமாகக் காணப்படுகின்றது. இந்த ஹஸ்ரமீ கலாச்சாரம் யெமன் நாடடுடனான நேரடித் தொடர்பு மூலமும், மலபார், காயல்பட்டணம், கிழக்கரை போன்ற தமிழகத்தின் முக்கிய முஸ்லிம் வணிக பண்பாட்டு மத்திய தலங்கள் மூலமாகவும் அதன் தாக்கத்தை தென் இலங்கை முஸ்லிம்களில் ஏற்படுத்தியது.

'அஹ்லுல் பைத்' என்னும் நபி (ஸல்) அவர்களின் பரம்பரையினர், ஸுபி மெர்ரானிகள், தரிகாக்கள் மூலம் ஹஸ்ரமௌத் கலாசாரத்தின் தாக்கம் இப்பிரதேசத்தில் ஏற்பட்டது. இத்துறையில் ஆழமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படின் கிழக்காபிரிக்கா, இந்தோனேசியா ஆகிய இடங்களில் காணப்படும் ஹஸ்ரமி கலாசாரத்திற்கும் தென்னிலங்கை முஸ்லிம்களின் கலாசாரத்திற்குமிடையில் சில ஒருமைப்பாடுகளை நாம் இனம்காண முடியும். ஆனால், இது ஒரு தனிப்பட்ட ஆய்வை வேண்டி நிற்கும் துறையாகும்.
பொதுவாக நோக்குமிடத்து தென்னிலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பாரம்பரியம் மிக பூர்வீகமானது: பாரம்பரியச் சிறப்பு மிக்கது: கி.பி. 1505 க்கும் கி.பி. 1796 க்குமிடையில் போர்த்துக்கேயர், டச்சுக்காரரின் அடக்கு முறைகளை எதிர்கொண்டு தங்களது இஸ்லாமிய தனித்துவத்தைப் பாதுகாத்து இன்றைய தலை முறையினருக்கு வாரிசாக அளித்த எமது மூதாதையர்கள் எங்களால் என்றும் நன்றிக்கடனுடன் நினைவு கூறப்பட வேண்டியவர்களாவர்.

Via : http://drshukri.net/
0 comments

கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும்

கம்பஹா மாவட்ட முஸ்லிம்கள் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும்


0 comments

மேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக அமையும்! – ஷாபி ரஹீம்

மேல் மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பேரம் பேசும் சக்தியாக அமையும்! – ஷாபி ரஹீம்


முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான வழங்கிய விசேட செவ்வி

நேர்காணல் :- எம். இஸட்.ஷாஜஹான் 
Safi_Raheem
உங்களது அரசியல் பிரவேசம்  மற்றும் வெற்றிகள் பற்றி கூறுங்கள் ?
நான் வர்த்தகத்துறையில்  ஈடுபட்டுக்  கொண்டிருந்த காலப் பகுதியில்  2004 ஆம் ஆண்டு  நடைபெற்ற மேல் மாகாண சபை தேர்தலில்  போட்டியிடுமாறு புத்தளம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய  முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீட உறுப்பினர் ஜனாப் நியாஸ் என்னை அந்த தேரத்ல் போட்டியிடுமாறு அழைப்பு விடுத்தார்.பின்னர் அவர் என்னை கட்சித் தலைவர் ரஹுப் ஹக்கீமுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் பின்னர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 3001 விருப்பு வாக்குகள் பெற்று மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். பத்து வருட இடைவெளியின் பின்னரே எனது வெற்றியின் மூலம் கம்பஹா மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் சார்பில் மேல் மாகாண சபைக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்தது.  அந்த தேர்தலில் மேல் மாகாண சபைக்கு எமது கட்சியின் சார்பில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர்.மாகாண சபை உறுப்பினராக  தெரிவு செய்யப்பட்ட பின்னர் நான் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் காரணமாக மீரிகமை, பியகம, நீர்கொழும்பு உட்பட கம்பஹா மாவட்ட சிறுபான்மையின மக்கள் நன்மையடைந்தனர். அதனைத் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற  மேல்மாகாண சபை தேர்தலில் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைமை வேட்பாளராக போட்டியிட்டு ன் 12 ஆயிரத்து 344 விருப்பு வாக்குள் பெற்று வெற்றி பெற்றேன். 2004 ஆம் ஆண்டு இடம்றெ;ற தேர்தலில் எமது கட்சிக்கு மேல் மகாண சபையில் 16 ஆயிரத்து 621 வாக்குகள் கிடைத்தன. 2004 ஆம் ஆண்டு இடம்றெ;ற தேர்தலில் எமது கட்சிக்கு 18 ஆயிரத்து 14 வாக்குள் கிடைத்தன. எனது விருப்பு வாக்குள் 9343 வாக்குகளால் அதிகரித்தன.அதனைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில்  எமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. அந்த தேர்தலில்;  எமது கட்சியை பிரிதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் நான் போட்டியிட்டேன். அந்த தேர்தலில்  23 ஆயிரத்து 122 விருப்பு வாக்குகளைப்; பெற்றேன். இவ்வாறு எமது கட்சிக்கு கம்பஹா மாவட்டத்தில் வாக்கு வங்கி அதிகரித்ததோடு எனது விருப்பு வாங்குகளும் பல மடங்காக அதிகரித்தது.  இது எமது கட்ச்யின் மீதும் எனது சேலையின் மீதும் கம்பஹா மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.
எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் மீண்டும் தலைமை வேட்பாளராக களமிறங்க இருக்கிறீர்கள். தனித்து போட்டியிடவுள்ள உங்களது கட்சி இந்த முறை கம்பஹா மாவட்டத்தில் தனது பிரிதிநிதித்துவத்தை தக்கவைத்துக் கொள்ளுமா?
நி;ச்சயமாக. நடைபெறவுள்ள தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் எனது வெற்றி நிச்சயம்.அது மட்டு;மல்ல இம்முறை கம்பஹா மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை நாஙகள் பெறுவோம். 2004 ஆண்டு முதல் மாகாண சபை உறுப்பினராக இருந்து தமிழ் பேசும் மக்களுக்காக நான் செய்த சேலையை யாவரும் அறிவர். நூன் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் எனது விருப்பு வாக்குகள் அதிகரித்துள்ளமை அதனை எடுத்துக் காட்டுகிறது.இந்த தேர்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற கிராம சேவகர் பிரிவுகள் இனங்காணப்பட்டு, எமது கட்சி;யின் வெற்றிக்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எமது கட்சிப் போராளிகள் எம்முடன் எப்போதும் போலவே உறுதுணையாக இருக்கிறார்கள்.நான் தினமும் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து எனது சக்திக்கு உட்பட்ட வகையில் மக்களின் தேவைகளை தீர்த்து வருபவன். நான் மக்களை சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் எமது கட்சிக்கு ஆதரவளிப்பது புரிகிறது. அவர்களின் ஆதரவும் உற்சாகமான வரவேற்பும் எமது கட்சியின் வெற்றியை கட்டியம் கூறுகிறது.
அப்படியானால் கம்பஹா மாவட்டத்தில்  உங்கள் கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்படும் பிரதிநிதித்துவம் எந்த தொகுதியைச் சேர்ந்தவராக இருப்பார் என நீங்கள் கருதுகிறீர்கள்?
புது வேட்பாளர்கள்  பலர் இந்த தேர்தலில் களமறிங்கவுள்ளனர். சகல இனங்களைச் சேர்ந்த வேட்பாளர்களையும் எமது கட்சியில் போட்டியிட வைக்கவுள்ளோம்.சிறப்பாக செயற்படக் கூடிய மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ளும் வேட்பாளர்கள்> அதிக விருப்பு வாக்களை பெறுவர். இந்த தொகுதியை சேர்ந்வர்தான்;  வெற்றி பெறுவார் என குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால் கம்பஹாவில் இரண்டு ஆசனங்கள் எமக்கு கிடைக்கும் என்பது நிச்சயமாகும்.
இரண்டு தடைவை மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்து நீங்கள் சாதித்தது என்ன?
நான் மக்களுக்கு செய்த சேவைகளை சாதனையாக கருதவில்லை. எனது கடமை மற்றும் பொறுப்பாக கருதுகிறேன். இந்த ஒன்பது வருட காலப் பகுதியில் கம்பஹா மாவட்ட முஸ்லிம் தமிழ் மக்கள் எனது பிரதநிதித்துவம் மூலமாக பல நன்மைகளையும், சேவைகளையும் பெற்றறுள்ளனர். அது ஒரு நீணட் பட்டியலாகும். குறிப்பாக கூறுவதாயின், நீர்கொழும்பில் விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி மற்றும் அல்-ஹி;லால் மத்தியக் கல்லூரி ஆகியவற்றுக்கு முச்சக்கர வண்களை பெற்றுக் கொடுத்துள்ளமை> பாடசாலைகள் பலவற்றுக்கு போட்டோ கொப்பி இயந்திரங்களை பெற்றுக் கொடுத்துள்ளமை, பாடசாலைகள் சிலவற்றுக்கு கட்டிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளமை> விளையாட்டு உபகரணங்களைவ வழங்கியுள்ளமை> ஆளணி நியமனங்களை பெற்றுக் கொடுத்துள்ளமை, வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல்  உபகரணங்கள் வழங்கியுள்ளமை> அஹதியா பாடசாலைகளுக்கு தளபாடங்களை வழங்கியுள்ளமை> அஹதியா ஆசிரியர்களுக்கும் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் கருத்தரங்குகள்  நடத்தியுள்ளமை என்பன கம்பஹா மாவட்ட பாடசாலைகளுக்கு செய்துள்ள சேவைகள் சிலவாகும்.அதேபோன்று> மாகாண மற்றும் உள்ளுராட்சி  மன்றங்களின் கீழ் உள்ள வீதிகள் பலவற்றை புனரமைப்பு செய்து கொடுத்துள்ளமை> வீதி மின்சார விஸ்தரிப்பு வேலைத்திட்டங்கள்> குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான நிதியுதவிகள் வழங்கியுள்ளமை, மலசல கூடங்களை அமைப்பதற்கான நிதியுதவிகளை வழங்கியுள்ளமை, இளைஞர் யுவதிகளுக்கு சுய தொழிலில் ஈடுபடுவதற்கான  பயிற்சிகள் வழங்கியுள்ளமை> மற்றும் சுய தொழிலுக்கான உபகரணங்களை வழங்கியுள்ளமை என பல வேலைத்திட்டங்கள் என்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை பயனாளிகளும் எமது கட்சியின் ஆதரவாளர்களும் நன்கு அறிவர்.
முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்களின் இஸ்லாமிய சட்டங்கள் மீதும் கலாசாரங்கள் மீதும் பொது பலசோனா உட்பட  பேரினவாதிகள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் உரிமை மீறல்கள் அடக்கு முறைகள் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் ஆக்கபூர்வமான வகையில் எதனையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
மேல்மாகாண சபையில் நானும் கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள  எமது கட்சி உறுப்பினர் ஹர்சாத் நிசாம்தீனும்  இது தொடர்பில் குரல்கொடுத்துள்ளோம். எமது கட்சியின் அதியுயர் பீடத்திலும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக எமது கருத்துக்களை தெரிவித்துள்ளளோம்> இவ்விடயம் தொடர்பில் எமது கட்சி அரசாங்கத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தே வருகிறது. அரசியலமைப்பில் சகல இன மக்களுக்கும் சம உரிமை வலியுறுத்தப்பட்டுள்ளது. எமது  உரிமையை இன்னொரு சமூகத்தில் உள்ள சிறிய குழுவொன்று பறித்தெடுக்க முடியாது.முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகளின் செயற்பாடுகளுக்கு  நாங்கள் அவர்களின் பாணியில் நடவடிக்கை எடுத்தால் நாட்டில் குழப்பம் ஏற்படும். உதாரணமாக எமது கட்சித் தலைவர் ஆவேசமாக குரல் கொடுத்தால் கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மையாக வாழும் பெரும் பான்மையின சமூகம் பாதிக்கப்படும்.அதன் எதிர் விளைவு முழு நாட்டிலும் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம் மக்கள் பாரிய இழப்புக்களை சந்திக்;க நேரிடும். இன்னொரு இன வன்முறை ஏற்படும். நாங்கள் சாணக்கியத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. எமது தலைவர் பொறுப்புடனும் அரசியல் சாணக்கியத்துடனும் நடந்து கொள்கிறார். ஏனைய  அரசியல்வாதிகள் போன்று எமது தேசியத் தலைவர் பேச முடியாது. கொழும்பு மாவட்டத்திலிருந்து கொண்டு அரசியல் இலாபம் பெறும் நோக்கில் சில அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்கலாம். முஸ்லிம் காங்கிரஸின்  தேசியத் தலைவர் அவ்வாறு  கதைக்க முடியாது. அவர் தேசிய கட்சியின் தலைவராவார்.
மேல் மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளது. தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமா?
எமது கட்சி துணிவுடன் தனித்து போட்டியிடவுள்ளது. அது தனது சொந்தக் காலிலேயே தேர்தலில் நிற்கிறது. தேர்தலின் பின்னர் எமது தலைவரும் எமது கட்சியின் அதியுயர்பீடமும் எடுக்கும் தீர்மானத்திற்கிணங்க  அது தொடர்பில் அறிவிக்கப்படும். எமது கட்சி தனித்து போட்டியிடுவது கட்சியின் பலமாகவும் எமது சமூகத்தின் பலமாகவும் அமையும். பொது பலசேனா உட்பட சிங்கள பேரினவாத அமைப்புக்களும் கட்சிகள் சிலவும்  முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்;லிம்  அமைச்சர்கள் மீது முஸ்லிம்களில் பெரும்பாலானோர் கடும்  விசனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
முஸ்லிம்களுக்கு சேவை செய்யவும் முஸ்லிம்;;களின் உரிமைகளை நிலை நாட்டவும்  முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அது தொடர்பில்  குரல் கொடுக்கவும்  எமது கட்சி கடமைப்பட்டுள்ளது. பிரச்சினை தொடர்பாக ஆவேசமாக பேசுபவர்கள் > பத்திரிகைகளுக்கு அறிக்கைவிடுபவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வன்;முறைகளை நாடுவதாகவே நான் கருதுகிறேன். அதனூடாக அவர்கள் அரசியல் இலாபம் தேடவே முயற்சி செய்கிறார்கள் பிரச்சினைகளை தீர்ப்பது அவர்களின் உண்மையான நோக்கமாக இருக்க முடியாது. முஸ்லிம் நாடுகளில் முஸ்லிம்களிடத்தில் ஒற்றுமை இல்லாததன் காரணமாகவே அங்கு குழப்பங்களும் இரத்தக் கறைகளும் தினம் தினம் அரங்கேறிவருகின்றன .இந்நிலையில் எமது நாட்டில் சிறுபான்மையினராக வாழும் நாங்கள் பெரும்பான்மையின மக்களுடன் புரிந்துணர்வுடனும் சகிப்புத் தன்மையுடனும் வாழ வேண்டும் . எங்களிடையே உள்ள ஒற்றுமையே எதிரிகளை தோல்வியடையச் செய்யும் என்பது நிச்சயமாகும். அதனால்தான் நபிகள் நாயகம் ஒற்றமை எனும்  கயிற்றை பற்றிப் பிடிக்குமாறு கூறியிருக்கிறார்கள். பொது பலசேனா போன்ற இனவாதிகள் சிறு குழுவினரே ஆவர்;. இந்த குழுவினர் காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவர். ஆயினும்  நாங்கள் அந்த குழுவினர் போன்று எதிர் நடவடிக்கை எடுக்க முடியாது. எமது சமூகம் விழிப்புடன் இருக்க வேண்டும். சமூகத்தின் பலத்தை நிலை நாட்;ட வாக்கு பலத்தை பயன்படுத்த வேண்டும். சமூகத்தின் மீது அழுத்தம் மேற்கொள்ளபடும் போது அதனை முறியடிக்க வேண்டியது எல்லோருடையதும் கடமையும் பொறுப்புமாகும்.முஸ்லிம்களின் மீது எதிரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது கட்சி பேதம் மற்றும் வேறு பேதங்களை காட்டி பிரிந்து நிற்காமல் ஒன்றுபட வேண்டியது கட்டாயமாகும்.  தனித்து எமது கட்சியை மட்டும் சாடுவது தவறாகும். முஸ்லிம்களை அரசியல் ரீதியில் பலயீனப்படுத்தும் வேலைத்திட்டம் என்றோ ஆரம்பித்து விட்டது. கொழும்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் குறைந்து இருப்பது இதற்கு சிறந்த உதாரணமாகும்.
உங்கள் கட்சி மேல் மாகாணத்தில் மொத்தமாக எத்தனை ஆசனங்களை பெறும் என கருதுகிறீர்கள்?
கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு ஆசனங்கள் வீதம் மொத்தமாக ஆறு ஆசனங்களை நாங்கள் பெறுவோம். இந்த தேர்தல் வெற்றியின் பின்னர் பேரம் பேசும் சக்தியாக எமது கட்சி இருக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயமாகும்.
Sunday, February 16, 2014 0 comments

கல்வி உளவியல்

கல்வி உளவியல்


கல்வி உளவியல் எனப்படுவது கல்வியூம் உளவியலும் இணைந்த ஒரு வார்த்தை மட்டுமள்ள அது ஒரு தனி அலகாக பரினமித்திருக்கின்ற ஒரு நவீன சந்தர்பபமாகும். கல்வி உளவியலின் மையப் புள்ளி மாணவரது நடத்தையாகும். இது குறித்து கருத்துக் கூறும் போது உளவியல் பாடத்தை வகுப்பறைக்கு பொருத்தமாக்கிக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளே கல்வி உளவியலாகும் என கல்வியியலாளர்கள் கருதுவதாகவூம் அதிகமானவர்கள் கல்வி உளவியல் என்பது தனக்கே உரிய கோட்பாடுகளையூம் பரிசோதனை நுற்பங்களையூம் பிரச்சினைகளையூம் தன்னகத்தே கொண்ட ஒரு துறையாகும் என்பதாக எனிடா வூல்பொல்க் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய கல்வி உளவியலினால் ஆசிரியர்கள் அதிகமான பயன்களைப் பெறுகின்றனர் உதாரணமாக

1. ஆசிரியர் தம்மைத் தாமே புரிந்து கொள்ளுதல்
2. மாணவரைப் புரிந்து கொள்ளுதல்
3. மாணவரது தனியால் வேறுபாட்டை அறிந்து கொள்ளுதல்
4. வகுப்பறை செயற்பாடுகளை சீர் செய்தல்
5. மாணவரது செயல்களை கட்டுப்படுத்துதல்
6. மாணவரை சிறந்த பொருத்தப்பாடடையச் செய்தல்
7. கற்றல் கற்பித்தலின் போது வரும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ளுதல் என பலவற்றைக் குறிப்பிடலாம்.
ஆரம்ப காலங்களில் கற்பித்தல் என்பது ஆசிரியரது பொறுப்பாக இருந்ததுடன் சம்பிரதாயங்கள் பாரம்பரிய விடயங்களுமே முக்கியம் பெற்றன. இன்று கல்வி உளவியலின் தாக்கம் அதிகமானதாலும் பாரம்பரிய முறைகள் தோழ்வியைத் தழுவியதனாலும் மனிதன் புதிய கோணங்களில் சிந்திக்க தலைப்பட்டான் அப்போது ஆசிரியன் தன்னை புரிந்த கொள்ள முற்பட்டான். அந்த புரிந்து கொள்ளலின் விளைவாக பிரதான 3 கோணங்களின் பார்வை விரந்தது
அ. கற்றல் நோக்கங்களை வரையறுத்தல்
ஆ. கற்றல் அனுபவங்களை ஒழுங்கமைக்கும் செயல்கள்
இ. கற்றல் விளைவூகளை மதிப்பிடும் செயல்கள்
ஏன மூன்றாக வகைப்படுத்தினர். இதனால் ஆசிரியர் ஆனவர் மாணவர்களை எத்தகைய நடத்தை எதிர்பார்ப்புக்களை அடைவதற்கு வழிநடாத்துவது என்ற அறிவினை அவர் பெறுகின்றார். அத்துடன் மாணவரது பல்வேறு துறைகளில் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு எத்தகைய மதிப்பீட்டு முறைகளை பயன்படுத்துவது? ஏன்ற விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியூம்.
அத்துடன் கற்பவரின் வயது மட்டம்இ வளர்ச்சிக் கட்டம்இ விN~ட பண்புகள் என்பன குறித்து ஆசிரியர் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள வழி ஏற்படுகின்றதுடன்  பல்வேறு உத்திகள்இ ஊக்கள்கல் போன்றவற்றையூம் அதனூடாக ஆசிரியர் - மாணவர் மற்றும் மாணவர் - மாணவர் தொடர்புகளை சீராக்கவூம் அவர் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டி ஏற்படுகின்றது. 
கற்பித்த விடயங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.  எதனை மதிப்பிட வேண்டும் எப்படி மதிப்பிட வேண்டும். அவ்வாறே பிரச்சினைகளை எதிரிகொள்ளும் மாணவர்களுக்கு தேவையான பின்னூட்டல்கள் வழங்கவேண்டி ஏற்படுகின்றது.  இந்த இடத்தில் ஆசிரியருக்கு கல்வி உளவியல் துணை புரிகின்றது.

உசாத்துணைகள்:

1.            யோ. பெனடிக் பாலன் - கல்வி உளவியலின அடிப்படைகள் - மதுறை - 1996
2.            மணியம் சிவகுமார் - அடிப்படை உளவியல் - சேமமடு – 2009
3.            முத்துலிங்கும் ச. - கல்வியூம் உளவியலும் - சேமமடு - 2010
4.            Anita E. Woolfolk - Education Psychology –Ohio USA+ 1993

 
;